- Home
- Tamil Nadu News
- திக்.. திக்.. டிட்வா! டெல்டாவை தொடர்ந்து அடுத்த டாக்கெட் சென்னை தான்! டெல்டா வெதர்மேன் அதிர்ச்சி தகவல்
திக்.. திக்.. டிட்வா! டெல்டாவை தொடர்ந்து அடுத்த டாக்கெட் சென்னை தான்! டெல்டா வெதர்மேன் அதிர்ச்சி தகவல்
Delta Weatherman: டிட்வா புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாகை அருகே மையம் கொண்டுள்ள இப்புயல் டெல்டா பகுதிகளில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை
தமிழகத்தை நெருங்கி வரும் டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இப்பகுதிகளில் 21 செ.மீ. அதிகமாக கனமழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயலால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
நாகையில் அதிகபட்சமாக 73 செ.மீ மழை
அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 73 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இந்நிலையில் காவிரி டெல்டா மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு எச்சரிக்கையாக இருக்குமாறு டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்
இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில்: டிட்வா புயல் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி நாகைக்கு தெற்கே-தென்கிழக்கே 190 கிமீ, காரைக்கால் 200 கிமீ தொலைவில் மையம்கொண்டுள்ளது. நாகை மாவட்டம் தோபுத்துறையில் 18 செ.மீ, நாலுவேலுபதி 17 செ.மீ காலை 5:30 மணி வரை மழை பதிவாகியுள்ளது. இப்புயல் தொடர்ந்து வடக்கு திசையில் பயணித்து அடுத்த சில மணி நேரங்களில் டெல்டா கடற்கரை அடைந்து வலுபெற வாய்ப்பு. டெல்டாவில் புயலின் முன்பகுதி நிலப்பகுதியில் ஊடுருவலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்டாவில் கனமழை
தற்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை துவங்கியுள்ளது, வரும் மணி நேரங்களில் படிப்படியாக அதிகரிக்கும். புயலின் மேற்கு டெல்டாவில் கரையேறும் போது இன்று பகலில் அதிகனமழை பெய்யும். காவிரி டெல்டா மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்
காவிரி டெல்டாவில் தாக்கத்தை ஏற்படுத்தி இன்று மாலை/ இரவு முதல் புயல் மீண்டும் வடக்கு திசையில் பயணிக்க துவங்கும் சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் வரும் மணி நேரத்தில் மழை துவங்கி இன்று இரவு முதல் (01.12.2025) காலைக்குள் பரவலாக கன முதல் மிக கனமழையும், அதித கனமழையும் ஏற்படுத்தும். காவிரி படுகை மாவட்ட மக்கள் இன்று வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

