- Home
- Tamil Nadu News
- ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்- தமிழக அரச அழைப்பு
ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்- தமிழக அரச அழைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 16.02.2025 அன்று மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம்.

ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்- தமிழக அரச அழைப்பு
படித்த படிப்பிற்கு வேலை தேடி பல லட்சம் இளைஞர்கள் பல்வேறு இடங்களுக்கு அலைகிறார்கள். அரசு பணிக்காக இரவு பகலாக படித்தும் தேர்வுக்கு தயாராகுகிறார்கள். தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது மட்டுமில்லாமல் சுய தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு சார்பாக பயிற்சியும் வழங்கப்படுகிறது. மேலும் கடனுதவிக்கான வழிகாட்டவும் செய்யப்படுகிறது. மேலும் தமிழக அரசு சார்பாக பல்வேறு தனியார் நிறுவனங்களோடு ஒப்பந்தம் மேற்கோண்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படுகிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
இதன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் படி விழுப்புரம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் 16.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்
சிறப்பு அம்சங்கள்
* 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்
* 10,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
தேர்வானவர்களுக்கு அன்றே பணிநியமன ஆணை
இலவச திறன் மேம்பட்டு பயிற்சிக்கான பதிவுகள்
தங்களுடைய Bio Data, சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் பங்குபெறலாம்
தகுதிகள் என்ன.?
கல்வித்தகுதிகள்
8th Pass, 10th, 12th, Diploma, Any Degree, Nursing, I.T.I, B.E, B.Tech.,
வயது வரம்பு
18 வயது முதல்- 35 வயது வரை
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற எந்த வித கட்டணமும் இல்லாமல் பங்கு பெறலாம் எனவும் அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து கொள்ள @ www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.