தமிழகத்தில் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல் - எவ்வளவு தெரியுமா? முழு விபரம்
தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
அதுமட்டுமல்லாமல், மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என கோரிக்கையும் பல்வேறு தரப்பில் வைக்கப்பட்டது. தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி, யூனிட் ஒன்றுக்கு 13 முதல் 21 காசுகள் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல வீடுகள், வேளாண், குடிசை இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்றும், கைத்தறி, விசைத்தறி போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மின் கட்டண உயர்வு ஒருபக்கம் அரசுக்கு வருவாய் வந்தாலும், மற்றொரு பக்கம் வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்று சொல்ல வேண்டும்.
மக்களே உஷார்.! இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு