MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பட்டப்பகலில் அரசு அலுவலகத்தில்.. 40 வயது ரேகா செய்த வேலை.. கையும் களவுமாக சிக்கியதால் அதிர்ச்சி

பட்டப்பகலில் அரசு அலுவலகத்தில்.. 40 வயது ரேகா செய்த வேலை.. கையும் களவுமாக சிக்கியதால் அதிர்ச்சி

government employee women: விழுப்புரம் மற்றும் திருவள்ளூரில் புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட இரண்டு மின்வாரிய அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Feb 11 2026, 08:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா ரெட்டணை அடுத்த நாரேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(29). இவர் கட்டியுள்ள புதிய வீட்டிற்காக மின் இணைப்பு பெறுவதற்காக ரெட்டனையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை நாடியுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த முகையூர் அடுத்த ஆலம்பாடியை சேர்ந்த மின் வணிக ஆய்வாளர் ரேகா(40), ஹரிகிருஷ்ணனிடம் புதிய இணைப்பு கொடுக்க ரூ.4000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

24
Image Credit : Asianet News

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிகிருஷ்ணன் இதுதொடர்பாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டு களை கொடுத்து, மின் வணிக ஆய்வாளர் ரேகாவிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி மின் அலுவலகத்துக்கு சென்று ரேகாவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து ரேகாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான ரேகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Related image1
மகா சிவராத்திரி! இரண்டு நாள் விடுமுறை.! போக்குவரத்து துறை வெளியிட்ட குட்நியூஸ்!
Related image2
ரெடியா மக்களே! பிப்ரவரியில் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வார்னிங்
34
Image Credit : stockPhoto

அதேபோல் சென்னை ஆவடிபொண்ணப்பிள்ளை நகரைச் சேர்ந்த விவசாயி ராகவன் என்பவர், தான் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார்.. இவர் தன்னுடைய வீட்டிற்கு மின் இணைப்பு கோரி கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த வருவாய் மேற்பார்வையாளர், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம் தர வேண்டும் என ராகவனிடம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராகவன், லஞ்சம் கொடுக்க விரும்பாமல் திருவள்ளூர் ஊழல் தடுப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.

44
Image Credit : ANI

இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய லஞ்சப் பணத்தை ராகவன் பாலசுப்பிரமணியத்திடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். லஞ்சம் வாங்கிய புகாரில் அடுத்தடுத்து அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு ஊழியர்கள்
காவல்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
பெண்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மொத்தமாக முடிச்சு விட்ட ஸ்டாலின்.. ராகுல் அதிருப்தி.. கதர்க்கட்சியை 'கை' விட்ட திமுக!
Recommended image2
மகா சிவராத்திரி! இரண்டு நாள் விடுமுறை.! போக்குவரத்து துறை வெளியிட்ட குட்நியூஸ்!
Recommended image3
ரெடியா மக்களே! பிப்ரவரியில் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வார்னிங்
Related Stories
Recommended image1
மகா சிவராத்திரி! இரண்டு நாள் விடுமுறை.! போக்குவரத்து துறை வெளியிட்ட குட்நியூஸ்!
Recommended image2
ரெடியா மக்களே! பிப்ரவரியில் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வார்னிங்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved