- Home
- Tamil Nadu News
- விவசாயிகளுக்கு குட் நியூஸ்.! மார்ச் 15 ஆம் தேதி தான் கடைசி-அதிகாரிகளுக்கு மின் வாரியம் அதிரடி உத்தரவு
விவசாயிகளுக்கு குட் நியூஸ்.! மார்ச் 15 ஆம் தேதி தான் கடைசி-அதிகாரிகளுக்கு மின் வாரியம் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மார்ச் 15-க்குள் விவசாய மின் இணைப்பு பணிகளை முடிக்க மின் பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.! மார்ச் 15 ஆம் தேதி தான் கடைசி
விவசாயம் தான் நாட்டின் ஆணி வேராக உள்ளது. அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்காக செயல்படுத்தி வருகிறது. மானிய விலையில், உரம், இலவச மின்சாரம், பேரிடர் நிவராண நிதி, கடன் உதவி உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும். இதில் விவசாயிகளுக்கு விவசாய இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 23.56 லட்சம் விவசாய இணைப்பு களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு சாதாரண மற்றும் சுயநிதி பிரிவு என்ற அடிப்படையில் இரண்டு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கி வருகிறது.
விவசாய மின் இணைப்பு
அதில், சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவு, மின் வினியோகம் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. சுய நிதி பிரிவில் வழித்தட செலவில் ஒரு பகுதியை விவசாயிகள் ஏற்க வேண்டும். இந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க, அரசு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் உரிய முறையில் மின் இணைப்பு வழங்காத காரணத்தால் 20,000 மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விவசாய மின் இணைப்பு தொடர்பாக மின் பகிர்மானக் கழக திட்டப் பிரிவு தலைமைப் பொறியாளர், அனைத்து தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
15 ஆயிரம் மின் இலக்கு
அதில் 2024-25-ம் ஆண்டுக்குள் விவசாய மின் இணைப்புள் 15 ஆயிரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதில் தற்போது 11 ஆயிரத்து 551 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் சாதாரண பிரிவில் 58 % இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மேட்டூர், நாமக்கல் நாகப்பட்டினம், தெற்கு கோவை, மதுரை, திண்டுக்கல், , தேனி, பல்லடம், தருமபுரி, வட்டங்களில் மிகவும் மோசமாக 60 % குறைவாகவே இலக்கு எட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகப்படுத்த உத்தரவு
மேலும் முக்கியமாக தட்கல் பிரிவில் 77 சதவீத இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் கோவை மெட்ரோ, நாமக்கல், கோபி, காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய வட்டங்கள் மோசமாக செயல்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவற்றை வேகப்படுத்த வேண்டும் எனவும் அரசு திட்டங்களுக்கு கீழ் வரும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய மின் இணைப்பு பணிகளை வருகிற மார்ச் 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது