- Home
- Tamil Nadu News
- ஆசிரியர்களுக்கு ஆப்பு ரெடி! இந்த 255 பேரின் கல்வித்தகுதி ரத்து? பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
ஆசிரியர்களுக்கு ஆப்பு ரெடி! இந்த 255 பேரின் கல்வித்தகுதி ரத்து? பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அஞ்சுகின்றனர்.

ஆசிரியர்களுக்கு ஆப்பு ரெடி! 255 பேரின் கல்வித்தகுதி ரத்து? பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆசிரியர்கள் 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மூவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.
பாலியல் சம்பவங்கள்
அதேபோல் மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் செய்தி வெளியானது. மேலும், சேலம் அரசு பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை, திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே 3ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை, ஒசூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியது. இதனால் பெற்றோர்கள் தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
இதுதொடர்பாக அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும், தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது பணி நீக்கம் போன்ற கடும் நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. இதனிடையே பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்கள் பட்டியலையும், அவர்கள் மீதான நடவடிக்கை விவரங்களையும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டுமென துறை இயக்குநர்களுக்கு அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கல்வித்தகுதி ரத்து
அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியலை கல்வித்துறை சேகரித்துள்ளது. அதன்படி, தொடக்கக் கல்வித்துறையில் 80 பேரும், பள்ளிக்கல்வித்துறையில் 175 பேரும் என 255 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. அவர்கள் மீது பணி நீக்கம், கல்வித்தகுதி ரத்து உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.