MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரு டீ கடைக்கு நிம்மதியா போக முடியுதா..? குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை.. இபிஎஸ் விமர்சனம்

ஒரு டீ கடைக்கு நிம்மதியா போக முடியுதா..? குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை.. இபிஎஸ் விமர்சனம்

மதுரை மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திமுக அரசுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 06 2026, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை
Image Credit : Asianet News

அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் திரு. செந்தில் அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

செந்தில் அவர்கள் தனது டீக்கடையை திறக்கச் சென்ற போது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகளை இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறியதை ஏற்காதவர்கள், அவரை கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கையாலாகாத பொம்மை முதல்வர்
Image Credit : ADMK

கையாலாகாத பொம்மை முதல்வர்

நான் அடிக்கடி சொல்லி வருகிறேன் - இந்த திமுக ஆட்சியில் எந்தவித குற்றத்தை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை. இப்படி கொடுரமாக தலை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு எங்கிருந்து குற்றவாளிகளுக்கு தைரியம் வருகிறது? சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வக்கில்லாத ஒரு கையாலாகாத பொம்மை முதல்வர் ஸ்டாலின்-ன் திமுக ஆட்சி இங்கு நடப்பதால் தானே?

34
டீ கடைக்கு செல்லக்கூட பாதுகாப்பு இல்லை..
Image Credit : Asianet News

டீ கடைக்கு செல்லக்கூட பாதுகாப்பு இல்லை..

தனது ஆட்சியில், ஒரு சாமானியர் காலையில் தனது டீக்கடையைப் பாதுகாப்புடன் திறக்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான நிலை? இதற்கு உள்ளபடியே திரு. ஸ்டாலின் அவர்கள் தலைகுனிய வேண்டும். உயிரிழந்த திரு. செந்தில் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ,

44
திமுகவை வீழ்த்துவதே ஒரே வழி
Image Credit : our own

திமுகவை வீழ்த்துவதே ஒரே வழி

திரு.செந்தில் அவர்களைப் படுகொலை செய்த வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். நான் மீண்டும் சொல்கிறேன்- தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான முதல் படி இந்த விடியா திமுக அரசை அடியோடு வீழ்த்துவதே ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பாஜக கூட்டணி
மு. க. ஸ்டாலின்
திமுக
திமுக கூட்டணி கட்சிகள்
மதுரை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கேரளா: தேர்தல் ஆணையரின் செயல்பாட்டைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் AIYF நடத்திய மாபெரும் பேரணி!
Recommended image2
Now Playing
இதுவரை முதல்வர் விஜய் உங்கள் நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் என்ன செய்தார் ? MP. கனிமொழி கேள்வி
Recommended image3
Now Playing
முதல்வர் விஜய் லண்டனுக்கு ஏன் சென்றார் என்று மக்களுக்கு தெரியும் ! எடப்பாடி பழனிசாமி அதிரடி
Related Stories
Recommended image1
ஓய்வூதியம்.. மத்திய அரசு திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக.. பழனிசாமி விளாசல்
Recommended image2
கமலும், நாங்களும் ஒன்றா..? திமுகவின் மத்தளத்தை உடைக்கும் கூட்டணி கட்சி..! ஸ்டாலின் ஷாக்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved