- Home
- Tamil Nadu News
- சென்னை அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரட்டைக் கொலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
சென்னை அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரட்டைக் கொலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
Chennai Double Murder: சென்னையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம்
சென்னையை அடுத்த மறைமலை நகர் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விமல் (22). இவரது நண்பர் ஜெகன் (23). இவர்கள் நேற்று இரவு சக நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இரட்டை கொலை
அப்போது எதிர்பாராத விதமாக 3 பேர் சேர்ந்து விமல் மற்றும் ஜெகன் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த விமல் உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜெகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார். கொலை செய்த 3 பேர் அங்கிருந்து தப்பித்தனர்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்வ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரை வெட்டி படுகொலை செய்த 3 கொலையாளிளை போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் மீதும் 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.