MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அமித்ஷா சொன்ன பொய்! அம்பலப்படுத்திய திமுக! நடந்தது என்ன?

அமித்ஷா சொன்ன பொய்! அம்பலப்படுத்திய திமுக! நடந்தது என்ன?

DMK Vs Amit Shah: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி தமிழில் வழங்கப்படுவதையும், புத்தகங்கள் மொழிபெயர்க்கப்படுவதையும் சுட்டிக்காட்டி உள்ளது.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 30 2025, 10:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழ் விரோத அரசு திமுக

தமிழ் விரோத அரசு திமுக

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், தமிழக அரசு மருத்துவம், பொறியியல் படிப்பை தமிழில் தொடங்கவில்லை. இதற்கான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பு கூட செய்யவில்லை. எனவே திமுக அரசு தமிழ் விரோத அரசாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் உரிய நேரத்தில் உடன்பாடு எட்டப்படும். சரியான நேரத்தில் முடிவை நாங்கள் அறிவிப்போம். தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு ஊழலில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. ஆகையால் மக்கள் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற தயாராகிவிட்டனர் என்று கூறியிருந்தார். இந்த கருத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அமித்ஷாவிற்கு திமுக பதிலடி

அமித்ஷாவிற்கு திமுக பதிலடி

இந்நிலையில் அமித்ஷாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பொய்கள், பொய்கள், பொய்கள் - பாஜக வழங்குவது அவ்வளவுதான்.  இந்த முட்டாள்தனத்தை உண்மைகளுடன் உடைப்போம். தமிழ்நாடு ஏற்கனவே பொறியியல் கல்வியை தமிழில் வழங்கி வருகிறது. 2010 முதல், அண்ணா பல்கலைக்கழகம் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் படிப்புகள் தமிழ் வழியில் வழங்கி வருகிறது.

இதையும் படிங்க: வசமாக சிக்கிய மிதுன்! அமித் ஷாவிடம் இபிஎஸ் சரண்டராக இதுதான் காரணம்! அதிமுக முன்னாள் நிர்வாகி பகீர்!

35
கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி

இதை யார் சாத்தியமாக்கினார்கள்? என்றால் அப்போதைய திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மறைந்த கலைஞர் கருணாநிதி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழில் மருத்துவக் கல்வி ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

45
இறந்த மொழியான சமஸ்கிரும்

இறந்த மொழியான சமஸ்கிரும்

ஜனவரி 2024 முதல் அதாவது ஒரு வருடத்திற்கும் மேலாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் (TNTBESC), மாணவர்களுக்கான கிரேயின் உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் கைட்டன் மற்றும் ஹால் பாடநூல் போன்ற முக்கிய மருத்துவப் பாடப்புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டது. இளநிலை மருத்துவ மாணவர்களுக்காக மொத்தம் 13 தமிழ் புத்தகங்களை 50 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு உருவாக்கி வருகிறது. தமிழ் அடையாளத்தை அழிக்க விரும்புவது பாஜக தான். அதனால்தான் இறந்த மொழியான சமஸ்கிருதத்திற்கு நூற்றுக்கணக்கான கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழுக்கு எந்த நிதியும் வழங்கவில்லை.

இதையும் படிங்க:  100 நாள் வேலைத்திட்டத்தை ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இரக்கமற்ற பாஜக அரசு! முதல்வர் ஸ்டாலின்!

55
பாஜகவின் தமிழர் விரோத பிரச்சாரம்

பாஜகவின் தமிழர் விரோத பிரச்சாரம்

பாஜக மற்றும் அதன் தலைவர்களின் அப்பட்டமான பொய்களை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். பாஜகவின் தமிழர் விரோத பிரச்சாரம் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் மண்ணில் வேலைக்கு ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அமித் ஷா
பிஜேபி
மு. க. ஸ்டாலின்
திமுக
அரசியல்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved