- Home
- Tamil Nadu News
- கோவில் வாசலில் திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு! யார் இந்த நிஷாந்த்? நடந்தது என்ன?
கோவில் வாசலில் திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு! யார் இந்த நிஷாந்த்? நடந்தது என்ன?
மதுரை முக்தீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய வந்த எம்.பி. தங்க தமிழ்செல்வனின் மகன் நிஷாந்த் மீது தந்தை, மகன் இருவர் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்தார். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது தங்க தமிழ்செல்வன் டிடிவி. தினகரனுடன் இணைந்து அமமுகவில் கொள்கைப் பரப்புச் செயலாளராகப் பணியாற்றினார். 2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், தினகரனுடனான கருத்து வேறுபாடு காரணமாக, 2019 ஜூன் 2ம் தேதியன்று திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த பிறகு, தேனி வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2021ல், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தங்க தமிழ்ச்செல்வன். 2024 மக்களவைத் தேர்தலில், அவர் தனது முன்னாள் குருவான அமமுகவை சேர்ந்த டிடிவி. தினகரனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி தொகுதியில் திமுகவின் முதல் வெற்றியாகும்.
இந்நிலையில் தங்க தமிழ்செல்வனின் மகன் நிஷாந்த் (30). உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மதுரை கே.கே.நகர் லேக் வியூ பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது கர்ப்பிணி மனைவியுடன் தரிசனம் செய்ய தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலுக்கு வந்துள்ளார். கோவில் வாசலில் தந்தை, மகனனுமான சமய முத்து (56), மணிகண்ட பிரபு (25) இருவரும் தேங்காய், பூ, பழ விற்பனை செய்து வருகின்றனர். தரிசனத்திற்காக வந்திருந்த நிஷாந்த், அர்ச்சனை தட்டு வாங்கியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது தந்த, மகன் இருவரும் சேர்ந்து மர நாற்காலியை எடுத்து நிஷாந்தை தாக்கியதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு தையல் போடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தந்தை, மகன் இருவரையும் தெப்பக்குளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளும் திமுக எம்.பி.தங்க தமிழ்செல்வனின் மகன் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.