MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இந்து மதம் மீது தீராத வன்மம் கொண்ட திமுக அரசு! மக்களே உங்களை விரட்டும் நிலை ஏற்படும்! வானதி சீனிவாசன்!

இந்து மதம் மீது தீராத வன்மம் கொண்ட திமுக அரசு! மக்களே உங்களை விரட்டும் நிலை ஏற்படும்! வானதி சீனிவாசன்!

Vanathi Srinivasan Vs DMK Government: தமிழ்நாட்டில் 23,500 இந்து கோயில்களில் அறங்காவலர் குழுக்கள் இல்லாததால், கோயில்கள் சீரழிந்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். 

2 Min read
vinoth kumar
Published : Dec 12 2024, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Vanathi Srinivasan

Vanathi Srinivasan

இதுதொடர்பாக தேசிய மகளிர் அணி தலைவரும், பாஜக கோவை எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் 43,631 இந்து கோயில்கள், 45 திருமடங்கள், திருமடங்களுடன் இணைந்த 69 கோயில்கள், 2,392 அறக்கட்டளைகள், 22 சமண கோயில்கள், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயில்களில் அறங்காவலர்கள் குழு அமைக்கப்பட்டே, நிர்வகிக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான கோயில்கள் அறங்காவலர்கள் குழு அமைக்கப்படவில்லை. இதனால் இந்து கோயில்களை சீரழிந்து வருவதை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

26
Tamilnadu Government

Tamilnadu Government

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, "தமிழ்நாடு முழுதும், 31,000 கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகவும், ஆனால், போதிய விண்ணப்பங்கள் வராததால், 23,500 கோயில்களில் அறங்காவலர் குழுக்களை அமைக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. மற்ற இந்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளது என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, இந்து சமய அறநிலையத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து கோயில்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டதாக திமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால், 23,500 கோயில்களில் அறங்காவலர் குழுக்களையே நியமிக்க முடியவில்லை என்பதிலிருந்தே, இந்து கோயில்கள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

36
MK Stalin

MK Stalin

அதிக வருமானம் வரும் கோயில்களில் மட்டும் இந்து சமய அறநிலையத்துறை கவனம் செலுத்துகிறது. இந்து கடவுள் மீது நம்பிக்கையற்ற, இந்து மதத்தின் மீது தீராத வன்மம் கொண்டவர்கள் திமுகவை கட்டுக்குள் வைத்திருப்பதால், அக்கட்சி ஆட்சியிலும் இந்து விரோதச் செயல்பாடுகளை அதிகம் காண முடிகிறது. சொத்துக்கள் அதிகம் உள்ள, உண்டியல் வருமானம் அதிகம் கிடைக்கும், உபயதாரர்கள் அதிகம் கிடைக்கும் இந்து கோயில்களில் மட்டும்தான் இந்து சமய அறநிலையத்துறையின் கவனம் உள்ளது. அந்த வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு கூட கோயில்களுக்கு செலவழிக்கப்படுவதில்லை.

46
DMK Government

DMK Government

வருமானம் இல்லாத அல்லது சொத்துகளில் இருந்து வருமானம் கிடைக்காத நிலையில் உள்ள இந்து கோயில்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை நினைத்தால் எளிதாக அறங்காவலர்களை நியமித்து விட முடியும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, இந்து மதத்தின் மீதும், அந்தந்த கோயில்களில் உள்ள கடவுளின் மீது பெரும் பக்தி கொண்டவர்கள் எல்லா ஊர்களிலும் உள்ளனர். அப்படி இந்து மதத்தின் மீது பற்று கொண்டவர்களை அறங்காவலர்களாக நியமிக்க திமுக அரசுக்கு மனமில்லை. பல கோவில்களில் திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள்தான் அறங்காவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். கடவுள் நம்பிக்கையற்ற, சமூக ஊடகங்களில் இந்து மதத்தின் மீது வெறுப்பை கக்குபவர்கள் கூட அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

56
Chidambaram Temple

Chidambaram Temple

23,500 இந்து கோவில்களில் அறங்காவலர்களை கூட நியமிக்க முடியாத திமுக அரசு, சிறந்த முறையில் தீட்சிதர்களால் நியமிக்கப்பட்டு வரும் சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோயிலில் தலையிட்டு தேவையற்ற நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது. என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யாமல், மற்றவர்கள் சிறப்பாக நிர்வகிக்கும் கோயில்களில் தேவையற்ற பிரச்னைகளை செய்து வருகிறது. திமுக ஆட்சியில் இந்து பண்டிகைகளுக்கு கூட முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை. தமிழக அரசின் இணையதளத்தில்கூட, இந்து சமய அறநிலையத்துறை என்று குறிப்பிடாமல், சமய அறநிலையத்துறை என்று குறிப்பிடும் அளவுக்கு இந்து மதத்தின் மீது தீராத வன்மம் கொண்டதாக திமுக அரசு உள்ளது.

66
BJP Vanathi Srinivasan

BJP Vanathi Srinivasan

திமுக அரசு உடனடியாக தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க வேண்டும். சிதிலமடைந்த கோயில்களை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இதை செய்ய முடியவில்லை எனில், இந்து கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து மதச்சார்பற்ற அரசு விலகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்து கோயில்களிலிருந்து மக்களே அரசை விரட்டும் நிலை ஏற்படும் என வானதி சீனிவாசன் ஆவேசமாக கூறியுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிஜேபி
மு. க. ஸ்டாலின்
வானதி சீனிவாசன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved