ADMK : திமுகவை விடாமல் அடிக்கும் எடப்பாடி.! காணாமல் போன பாஜக- அண்ணாமலைக்கு முன் கெத்துக்கட்டும் அதிமுக
தமிழகத்தில் நாங்கள் தான் எதிர்கட்சி என்று கூறிவரும் பாஜகவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரசியல் களத்தில் வேகமாக இறங்கியுள்ளதுஅதிமுக . நாள் தோறும் போராட்டம், சட்டசபையில் அமளி என எடப்பாடியின் புது விஷ்வரூபம் திமுகவினர் மட்டுமல் பாஜகவினரையும் அதிர்ச்சை அடைய செய்துள்ளது.
EPS
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல பிளவுகளாக பிரிந்து தள்ளாடி வருகிறது. இதனையடுத்து நடைபெற்ற 10 தேர்தல்களிலும் அதிமுகவிற்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. இந்த காலக்கட்டத்தில் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. அப்போது அதிமுக போராட்டம் அறிவிப்பதற்கு முன்பாக களத்தில் பாஜக இறங்கும், திமுகவிற்கு எதிராக அறிக்கைவிடும், தொடர் செய்தியாளர்களை சந்திக்கும். திமுக அரசின் செயல்பாடுகளை பாஜகவினர் விமர்சிப்பார்கள்.
இதனால் தமிழகத்தில் எதிர்கட்சி யார்.? அதிமுக என்ன செய்துகொண்டுள்ளது. எடப்பாடி அணி எங்கே என்ற கேள்வி எழுந்தது. அப்போது பாஜகவும் அதிமுகவுடன் கூட்டணி உள்ளோம் என்பதை நினைத்துக்கூட பார்க்காமல் நாங்கள் தான் எதிர்கட்சி 2026ஆம் ஆண்டு பாஜக தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என வெளிப்படையாகவே கூறியது.இதனால் பாஜகவிற்கு பின் அதிமுக தள்ளப்பட்டதோ என்ற நிலை உருவானது.
துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் முக்கிய பதவி..
அப்போது தான் தைரியமாக முடிவெடுத்தார் எடப்பாடி, பாஜகவுடன் கூட்டணியை முறித்தார். பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்தால் அதிமுக காணாமல் போய்விடும், அல்லது அதிமுகவை பாஜக அபகரித்து விடும் என நிர்வாகிகள் கூற தொடங்கினர். இதனால் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நட்புடன் இருந்த போதே கூட்டணியை அதிரடியாக முறித்துக்கொண்டார் இபிஎஸ். இதனை தொடர்ந்து பாஜக மேலிடத்தில் இருந்து பல தூதுகள் வந்த போதும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் 40க்கு 40 தொகுதிகளில் அதிமுக மட்டுமில்லாமல் பாஜகவும் தோல்வி அடைந்தது. அதிமுகவின் வாக்கு சதவகிதிம் பெரிதும் சரிந்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தான் தமிழகத்தில அதிக வாக்குகளை கொண்ட கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தற்போது வாக்கு சதவிகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது.
இந்த தேர்தல் முடிவிற்கு பிறகு, அதிமுகவை கைப்பற்ற களம் இறங்கினார் சசிகலா. அதிமுகவை கைப்பற்றுவோம், ஆட்சி அமைப்போம் என தெரிவித்தார். இதற்கு எடப்பாடியும் பதிலடி கொடுக்க தொடங்கினார். முன்பை விட வேகமாக அரசியல் செய்ய தொடங்கினார். அப்போது அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்,
முதல் ஆளாக குரல் கொடுக்க தொடங்கினார். இதனை பார்த்த பின்னர் தான் மற்ற கட்சிகளும் விழித்துக்கொண்டது. நேரடியாக கள்ளக்குறிச்சிக்கு சென்ற எடப்பாடி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துமனையில் மருந்து இல்லை, காவல் துறை கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்ளவில்லையென ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார்.
அடுத்ததாக முதலமைச்சர் பதவி விலக வேண்டும், சிபிஐ விசாரணை தேவை என குரல் கொடுத்தார். சட்டமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகள் இல்லாத வகையில் அதிமுகவின் பலத்தை காட்டினார். சட்டசபை தொடங்கியதுமே அதிமுகவினர். அமளியில் ஈடுபட்டனர் ஆளுங்கட்சி திமுகவோ எவ்வளவு கெஞ்சியும் விடவில்லை, தொடர் போராட்டம், ஆளுநரிடம் புகார், சட்டசபையில் அமளி, அடுத்ததாக உண்ணாவிரதப் போராட்டம் என இறங்கிவிட்டார் எடப்பாடி,
எடப்பாடியின் இந்த திடீர் விஷ்வரூபத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறியது திமுக மட்டுமில்லை பாஜக தலைமையும் தான், அதிமுகவினர் திடீர் அதிரடியால் பாஜகவின் எதிர்ப்புகள் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காணமல் போய்விட்டது. இதற்கு மற்றொரு காரணம் தேர்தல் முடிவிற்கு பிறகு பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் அக்கட்சி என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறது.
கட்சியின் தலைவரை தவிர வேறு யாரும் செய்தியாளர்களை சந்திக்க கூடாது, கட்சி தலைமையிடத்தில் மட்டுமே செய்தியாளர் சந்திப்பு, பாத்ரூம் போகும் போது, வரும் போது செய்தியாளர் சந்திப்பு இல்லையென அண்ணாமலையின் உத்தரவு அவருக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தினந்தோறும் மீடியா வெளிச்சம் அவர் மீது பட்டது தற்போது குறைய தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினரின் திடீர் எண்ட்ரி நாங்கள் தான் தமிழகத்தில் எதிர்கட்சி என்பதை சொல்லாமல் சொல்வதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.