- Home
- Tamil Nadu News
- டெல்லிக்கு நான் தான் சிறந்த அடிமை என்பதை நிரூபிக்கும் பழனிசாமி.. SIR போராட்டத்தில் கொந்தளித்த கனிமொழி
டெல்லிக்கு நான் தான் சிறந்த அடிமை என்பதை நிரூபிக்கும் பழனிசாமி.. SIR போராட்டத்தில் கொந்தளித்த கனிமொழி
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி டெல்லிக்கு நான் தான் சிறந்த அடிமை என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

SIRக்கு எதிராக போராட்டத்தில் குதித்த திமுக கூட்டணி
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணிக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய் கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணிக்கட்சி தலைவர்கள் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
டெல்லியின் சிறந்த அடிமை
தூத்துக்குடியில் நடைபெற்ற SIRக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “முதலாளிக்கு ஆதரவாக அடியாட்கள் இருப்பது போல் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக இருக்கிறது. S.I.R-க்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்குப் போட்டால், ஆதரவாக பழனிசாமி வழக்குப் போடுகிறார். டெல்லி கூட்டத்திற்கு நான் தான் சிறந்த அடிமை என காட்டிக்கொள்கிறார் பழனிசாமி” என்று காட்டமாக தெரிவித்தார்.
இந்தியாவிலேயே SIRஐ ஆதரித்த ஒரே கட்சி
பாஜக கூட SIRஐ ஆதரித்து வழக்கு போடாத நிலையில், பாஜகவின் கிளைக் கழகமாகவே செயல்படும் அதிமுகவும் அதன் சிறந்த அடிமையான பழனிசாமியும் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள். இந்தியாவிலேயே கார் வைத்திருக்கும் ரகாட்டக் கோஷ்டி நாம் தான் என்ற காமெடி போல இந்தியாவிலேயே SIRஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுக தான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
SIR பாஜகவின் திட்டம் இல்லை.. RSSன் திட்டம்..
SIR என்பது முழுக்க முழுக்க குடியுரிமையை ஆய்வு செய்யும் நடவடிக்கை, இது ஒரு மறைமுக செயல் திட்டம். தற்போது செயல்படுத்துவது பாஜகவின் திட்டம் அல்ல, ஆர் எஸ் எஸ்-ன் செயல் திட்டம். அரசியலமைப்புச் சட்டம் தரும் அனைவர்க்கும் வாக்குரிமை அளிப்பதை சிதைப்பதே அவர்களின் நோக்கம். இதனை நாம் முறியடிக்க வேண்டும்.SIR என்பது முழுக்க முழுக்க குடியுரிமையை ஆய்வு செய்யும் நடவடிக்கை, இது ஒரு மறைமுக செயல் திட்டம். தற்போது செயல்படுத்துவது பாஜகவின் திட்டம் அல்ல, ஆர் எஸ் எஸ்-ன் செயல் திட்டம். அரசியலமைப்புச் சட்டம் தரும் அனைவர்க்கும் வாக்குரிமை அளிப்பதை சிதைப்பதே அவர்களின் நோக்கம். இதனை நாம் முறியடிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.