MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 200 தொகுதி இலக்கு.! திமுக மாவட்ட செயலாளர்களை மீண்டும் தூக்கி அடித்த ஸ்டாலின்

200 தொகுதி இலக்கு.! திமுக மாவட்ட செயலாளர்களை மீண்டும் தூக்கி அடித்த ஸ்டாலின்

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு திமுக காய் நகர்த்துகிறது. மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதிய நியமனங்கள் என வியூகங்களை வகுத்து வருகிறது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Feb 23 2025, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
200 தொகுதி இலக்கு.! திமுக மாவட்ட செயலாளர்களை மீண்டும் தூக்கி அடித்த ஸ்டாலின்

200 தொகுதி இலக்கு.! திமுக மாவட்ட செயலாளர்களை மீண்டும் தூக்கி அடித்த ஸ்டாலின்

தமிழகத்தில் அதிமுக- திமுக என பல ஆண்டுகாலமாக மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சியை இழந்த திமுக அடுத்த 10 வருடங்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க சிரமப்பட்டது. அதன் படி அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியே திமுகவிற்கு கிட்டியது. இந்த நிலையில் தான் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது வலுவான கூட்டணியை திமுக உருவாக்கியது. அதன் படி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் என முக்கிய அரசியல் கட்சிகளை இணைத்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
திமுகவின் வெற்றி கூட்டணி

திமுகவின் வெற்றி கூட்டணி

இதனால் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியை தவிர மீதமுள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றி அடுத்தடுத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களிலும் எதிரொலித்தது. இதனால் திமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக உருவெடுத்தது.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு பெரிய அளவில் வெற்றி வாய்ப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணியை ஆளுங்கட்சியான திமுக தற்போதே தொடங்கியுள்ளது.

35
மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

அதன் படி 200 தொகுதி இலக்காக என நிர்ணயித்து களம் இறங்கியுள்ளது. இதனால் வட்ட செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் படி திமுக சார்பில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதிரடியாக உத்தரவிட்டது. இதன் படி இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என புதிதாக உருவாக்கப்பட்டது.

இதனையடுத்து ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் சட்டப்பேரவை தொகுதிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த தோப்பு வெங்கடாசலம், லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

45
புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

செஞ்சி மஸ்தான், அப்துல் வஹாப் ஆகியோருக்கும் மீண்டும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூருக்கு பழனிவேல் நியமிக்கப்பட்டார்.  திருப்பூர் மேயர் தினேஷ் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக ரமேஷ் ராஜ் நியமிக்கப்பட்டார். 

நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த எஸ்.எம். மதுரா செந்தில் விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நாமக்கல் மாவட்டம் கொத்தமங்கலத்தை சேர்ந்த கே.எஸ்.மூர்த்தி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

55
தருமபுரி மாவட்ட செயலாளர் மாற்றம்

தருமபுரி மாவட்ட செயலாளர் மாற்றம்

இந்த நிலையில் தற்போது தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியம் நீக்கப்பட்டு இவருக்கு பதிலாக  தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்ம செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக க பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
Recommended image2
Now Playing
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Recommended image3
Now Playing
"கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகமாக இருக்க தேவையில்லை" எதற்கும் தொய்வடைய வேண்டாம் - ஸ்டாலின் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved