இனி 2- 3 நிமிடங்களில் ரேஷன் பொருட்கள்.! கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு
ரேஷன் கடைகளில் புதிய நடைமுறையால் பொருட்கள் வாங்க காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. POS கருவிகளை எடைத்தராசுகளுடன் இணைத்ததால் இப்பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு, பொருட்கள் வழங்க 2-3 நிமிடங்களே ஆகிறது.

ரேஷன் கடைகளில் மலிவு விலையில் உணவுப்பொருட்கள்
ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை காரணமாக பொருட்கள் வாங்க நீண்ட நேரம் கால தாமதம் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவுத்துறையின் கீழ்மொத்தம் 35,001 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 1,292 கூட்டுறவு நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரின் 05.07.2024 நாளிட்ட கடிதத்தில், நியாயவிலைக்கடைகளில் உள்ள POS கருவிகளை எடைத்தராசுகளுடன் இணைக்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் PoS கருவியுடன் எடைதராசினை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 28,736 கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் வாங்க கால தாமதம்
இணைப்பு ஏற்படுத்தப்பட்டு எடைதாரசுடன் விற்பனை முனையகருவி இணைக்கப்பட்ட பிறகு தற்போது விற்பனை முனையகருவியில் கைவிரல்ரேகையை பதிவுசெய்தபின்னர் அத்தியாவசியப்பொருட்களை ஒருகுடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்கு தற்போது 2 முதல் 3 நிமிடங்களே மட்டுமே ஆகின்றன.
01.06.2025 முதல் பழைய விற்பனை முனைய இயந்திரத்தில் (L0) கைவிரல் ரேகை சரிபார்க்கும் முறை செயல்படாது என்று UIDAI-ஆல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பகுதிநேர நியாயவிலைக்கடைகளில் உள்ள பழைய விற்பனை முனைய இயந்திரத்தில் (L0) கருவிழிபதிவின் மூலமே மட்டுமே விற்பனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து மாநில அரசு UIDAI-ஐ கேட்டுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது பகுதி நேரநியாயவிலைக்கடைகளில் பழையவிற்பனை முனைய இயந்திரந்தில் (L0) கைவிரல் ரேகை சரிபார்க்கும் முறை எவ்வித சிக்கல்களும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
நியாயவிலைக்கடைகளில் POS கருவி
நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப்பொருட்கள் விநியோகத்தில் ஏற்பட்ட காலதாமதம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை தொடர்ந்து, எவ்வித சிக்கல்களும் இல்லாமல் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு தேவையான தொழில் நுட்பமாற்றங்கள் மென்பொருள் நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசு திட்டத்தின் கீழ் அத்தியாவசியப்பொருட்கள் வழங்குவதற்குதற்போது ஒருமுறைமட்டுமே குடும்பஅட்டைதாரரின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது.
மின்னணு எடைதராசில் 35 கிலோ அரிசியை ஒரு தற்போது முறையிலேயே எடைபோடுவதற்குரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு நகர்வு செய்யும் முதன்மைச் சங்கங்கள் / சுய எடுப்புசங்கங்கள் அதன் பணியாளர் ஒருவரை (Movement Clerk) நகர்வு பணியினை கண்காணிக்கும் வரையில் கிடங்களில் பணியமர்த்தம் செய்யவேண்டும் என்றும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் லாரியுடன் முதன்மைச் சங்க / சுய எடுப்பு சங்கபணியாளர் ஒருவர் கண்டிப்பாக செல்லவேண்டும் என்றும்.
2-3 நிமிடங்களில் உணவுப்பொருட்கள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் சரியான எடையில் நகர்வுசெய்யப்படுவதையும் லாரியில் நகர்வு பணியாளர்கள் செல்வதையும், நியாயவிலைக்கடைகளில் எவ்வித எடைகுறைவுமின்றி சரியான எடையில் இறக்கப்படுகின்றன என்பதையும் கூட்டுறவு சார்பதிவாளர் (பொதுவிநியோகத்திட்டம்). (பொதுவிநியோகத்திட்டம்) மற்றும் தீவிரமாககண்காணித்து வருகின்றனர்.
மின்னணு எடைதாரசுடன் விற்பனை முனையகருவி இணைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக பதிவாளர் அலுவலகத்தில் 09.07.2025 அன்று தமிழ்நாடு மாநிலதொடக்க கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர்கள் சங்கப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து வேலைநிறுத்தப்போராட்டம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை ஒருகுடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்கு தற்போது 2 முதல் 3 நிமிடங்களே மட்டுமே ஆவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.