- Home
- Tamil Nadu News
- மாணவர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை?
மாணவர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை?
Half yearly Exam: 2025-26 கல்வியாண்டில் வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளன. காலாண்டுத் தேர்வுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 15 முதல் 23 வரை அரையாண்டுத் தேர்வு. அதனை தொடர்ந்து 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி, கல்லூரி மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை என்றாலே அளவில்லாத குஷிதான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் 2025-26க்கான கால அட்டவணையில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாகவும், இந்த ஆண்டு முதலில் 220 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டது, ஆனால் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று 10 நாட்கள் குறைக்கப்பட்டு 210 நாட்களாக திருத்தப்பட்டது. குறைக்கப்பட்ட 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
காலாண்டு தேர்வு விடுமுறை
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 18ம் தேதி முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் செப்டம்பர் 27ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு அக்டோபர் 6ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. காலாண்டு தேர்வு விடுமுறை மொத்தம் 9 நாட்கள் கிடைத்தது.
அரையாண்டு தேர்வு
இதில் ஆயுத பூஜை, விஜய தசமி, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விடுமுறைகளும் அடங்கும். இந்நிலையில் அரையாண்டு தேர்வு எப்போது எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பார்ப்போம்.
அரையாண்டுத் தேர்வு விடுமுறை
அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை வருகிறது. இதில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்டவைகள் அடங்கும். அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.