- Home
- Tamil Nadu News
- ரியல் எஸ்டேட் அதிபரை மடக்கிய சுவாதி.. இடையில் புகுந்த கிஷனின் தங்கச்சி மகன்! அதுவும் மகன் கண்முன்னே இப்படியா!
ரியல் எஸ்டேட் அதிபரை மடக்கிய சுவாதி.. இடையில் புகுந்த கிஷனின் தங்கச்சி மகன்! அதுவும் மகன் கண்முன்னே இப்படியா!
தெலங்கானாவில், ரியல் எஸ்டேட் அதிபருடன் கள்ளக்காதல் வைத்திருந்த சுவாதி என்ற பெண், தனது மகன் கண்முன்னே கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்த தொழில் அதிபரின் உறவினர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம். இதனால் கள்ளக்காதல் ஜோடிகளுக்கு இடையே ஏற்படும் தகராறு கொலையில் முடிந்து விடுகின்றன. அதுபோல தெலங்கானாவிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி (28). இவருக்கு திருமணமாகி கணவரும், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுவாதி பிரிந்து தனது மகன்களுடன் துண்டிகல் என்ற இடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கிஷன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
சுவாதியின் ஒரு மகன் விடுதியில் தங்கி படித்து வந்தான். மற்றொரு மகன் அவருடன் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் தொழில் அதிபர் கிஷனுக்கும் சுவாதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் எல்லை மீறிய சுவாதி கிஷனுக்கு சொந்தமான குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளின் வாடகையையும் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். இந்த விவகாரம் கிஷனின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் கிஷனின் சகோதரி மகன் ராஜேஷ் என்பவர் சுவாதியை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று முன்தினம் சுவாதியும், அவரது இளைய மகனும் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது திடீரென உள்ளே நுழைந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து மகன் கண்முன்னே சுவாதியை கழுத்தை அறுத்துள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜேஷ் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் தலைமறைவாக உள்ள அவரது நண்பரை தேடி வருகின்றனர்.