- Home
- Tamil Nadu News
- TASMAC Shop: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!
TASMAC Shop: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!
தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு பிற வருவாய்களை காட்டிலும் அதிக வருவாய் ஈட்டி தருவது டாஸ்மாக்தான். பிற மாநிலங்களை பொறுத்தவரை மதுபானங்களை விற்பனை செய்வது தனியார் நிறுவனங்கள்தான். ஆனால், தமிழ்நாட்டில் அரசே எடுத்து நடத்தி வருகின்றனர். திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மது கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று மூடப்பட வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல, மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் உரிமங்களை ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமைதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.