17 வயது சிறுவனுடன் 37 வயது ஆண்டி..! நேரில் பார்த்த மாமியாரை அலறவிட்ட கவிதா!
17 வயது சிறுவனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த பெண், இந்த உறவுக்கு இடையூறாக இருந்த தனது மாமியாரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்துள்ள சாமந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கவிதா(37). இருவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கவிதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
சிறுவன் என்பதால் யாருக்கும் சந்தேகம் வராததால் இருவருக்கும் வசதியாக போனது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் கவிதாவின் கணவர் விஜய்க்கு தெரியவந்தது. இதனையடுத்து மனைவியைக் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். சிறுவன் கவிதா உல்லாசமாக இருந்ததை மாமியார் நிர்மலா நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவன் மற்றும் மாமியாரை போட்டுத்தள்ள கவிதா திட்டமிட்டார். அதன்படி கணவர் மற்றும் பிள்ளைகள் இல்லாத நேரத்தில் மாமியார் நிர்மலா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது கவிதா சிறுவனை வீட்டிற்கு வரவழைத்து கத்தி மற்றும் மிளகாய் பொடியை முகத்தில் தூவி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றனர்.
அப்போது நிர்மலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பித்தார். இதனை தொடர்ந்து நிர்மலாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை மருமகள் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து கவிதா தலைமறைவான நிலையில் சிறுவன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டதை அடுத்து கவிதாவைத் தேடி வருகின்றனர்.

