மகளிர் சுய உதவிக்குழு ஆவலோடு எதிர்பார்த்த செய்தி.! தேதி குறித்த அரசு
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்காக இயற்கை சந்தையை நடத்துகிறது. மகளிர் குழுக்கள் தயாரித்த பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள், மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. அந்த வகையில் வங்கிகளின் மூலம் கடன் உதவி திட்டம், சொந்தமாக தொழில் தொடங்க மானிய உதவி திட்டங்கள், சுழல்நிதி என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் மகளிர் சுயு உதவிக்குழுவினர் தயாரித்த பொருட்களை விற்பனை செய்யும் வகையில் இயற்கை சந்தை நிகழ்ச்சியை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப் பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயற்கை சந்தை நடைபெறுகிறது.01.11.2025 சனிக்கிழமை மற்றும் 02.11.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இயற்கை சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானிய மதிப்புக் கூட்டுப் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழ வகைகள். பனை ஓலைப் பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் இந்த இயற்கை சந்தையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவுப் பொருட்களும் கிடைக்கும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் இயற்கை சந்தையைப் பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் தரமான உற்பத்திப் பொருட்களை வாங்கி மகிழ அன்புடன் அழைக்கின்றோம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.