3 மணி நேரமாக நகராமல் இருக்கும் ஃபெஞ்சல் புயல்.! மயிலம், புதுவையை புரட்டிப்போட்ட பேய் மழை
Cyclone Fengal : வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்று தமிழகத்தில் கனமழையை கொண்டு வந்தது. புயல் நேற்று இரவு கரையைக் கடந்தது, பல இடங்களில் கனமழை பெய்துள்ளது.
Cyclone Fengal
வானிலை மையத்திற்கே டப் கொடுத்த புயல்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கையை ஒட்டி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலு அதிகரித்தது. அதன் படி இலங்கை பகுதியில் கொட்டிய மழை தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்தது. அதன் படி காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என வலுவானது. ஆனால் ஒரு சில நாட்கள் நகராமல் ஒரே இடத்திலையே நீடித்தது. மேலும் இந்த புயல் சின்னம் வலுபெறுமா.? வலு பெறாதா என பல வித குழப்பங்கள் உருவானது.
Heavy Rain
காற்றோடு மழை
முதலில் ஃபெஞ்சல் புயல் உருவாகும் என கூறப்பட்டது. அடுத்த நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. திடீரென வேகம் அதிகரித்ததால் ஃபெஞ்சல் புயலாகவே கரையை கடக்கும் என கூறப்பட்டது. அதன் படி நேற்று அதிகாலை முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டியது. காற்றோடு வீசிய மழையில் மரங்கள் முறிந்து விழுந்தது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
cyclone
கரையை கடந்த புயல்
நேற்று இரவு புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது அதன் படி ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு பலத்த காற்றோடு கரையை கடந்தது. இது தொடர்பாக தென்மன்டல் வானியை அய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், நேற்று மாலை 5.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கிய நிலையில் இரவு 10.30 மணி முதல் 11.30 வரை முழுமையாக கரையை கடந்தது.
இது தொடர்ந்து புதுச்சேரிக்கு அருகே நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் 7 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்துள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் ஒரே இடத்தில் உள்ளது.
heavy rain in tamilnadu
ஒரே இடத்தில் நீடிக்கும் ஃபெஞ்சல் புயல்
தற்போது நிலவரப்படி மெதுவாக மேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் வலு குறையும். 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிக கன மழையும், 20 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மைலத்தில் 50 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி 46 செ.மீட்டர் மழை பதிவாகிவுள்ளது.