MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பாஜக எம்.பி வேட்பாளர் தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டதா.? நீதிமன்றம் அதிரடி

பாஜக எம்.பி வேட்பாளர் தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டதா.? நீதிமன்றம் அதிரடி

சிவங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ், முதலீட்டாளர்களிடம் 24 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Feb 20 2025, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பாஜக எம்.பி வேட்பாளர் தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டதா.? நீதிமன்றம் அதிரடி

பாஜக எம்.பி வேட்பாளர் தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டதா.? நீதிமன்றம் அதிரடி

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் யாதவ், பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 150 ஆண்டுகள் பழமையான 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’இயக்குனராக உள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  தங்களது ஓய்வூதிய பணத்தை அனைத்தையும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். மேலும் நிரந்தர வைப்பு தொகையும் வைத்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
நிதி நிறுவன மோசடி

நிதி நிறுவன மோசடி

மேலும் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர் இதனை நம்பியும் பலர் பணத்தை கட்டியுள்ளனர். ஆனால் உரிய வகையில் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளனர். முதலீட்டாளர்களுக்கு  இரண்டு வாரங்கள் தள்ளி தேதியிட்ட செக் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த செக்கும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனிடையே பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த புகாரின் பேரில்,

35
ஜாமின் கோரி தேவநாதன் மனு

ஜாமின் கோரி தேவநாதன் மனு

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் 7 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில்,

45
பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம்

பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம்

இரண்டாவது முறையாக தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், முழுமையாக விசாரணை நிறைவடையவில்லை என கூறினார். எனவே இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

55
சொத்துக்கள் முடக்கமா.?

சொத்துக்கள் முடக்கமா.?

மேலும் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேவநாதன் யாதவ் நிதி நிறுவனத்தில் பணத்தை செலுத்தி பாதிக்கபட்டுள்ளதால், ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி சுந்தர் மோகன் தேவநாதன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இன்று நடைபெற்ற விசாரணையில் ஜாமின் தொடர்பாக நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்காத காரணத்தால் தொடர்ந்து சிறையில் இரு்க்க வேண்டிய நிலை தேவநாதன் யாதவ்விற்கு ஏற்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சென்னை உயர் நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
Recommended image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image3
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved