- Home
- Tamil Nadu News
- பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
வார விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. தொலைதூர பயணம் மேற்கொள்பவர்கள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu State Transport Corporation
பவுர்ணமி, அமாவாசை, தீபாவளி, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை போன்ற பண்டிகை நாட்களில் பயணிகள் சிரமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்துத்துறை கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வார விடுமுறையை முன்னிட்டு தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
Transport Department
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: பிப்ரவரி 28ம் தேதி வெள்ளிக்கிழமை, மார்ச் 1 சனிக்கிழமை, மார்ச் 2 ஞாயிறு வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Weekend Special Buses
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 245 பேருந்துகளும், மார்ச் 01ம் தேதி சனிக்கிழமை 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று 51 பேருந்துகளும் மார்ச் 01ம் தேதி சனிக்கிழமை அன்று 51 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்திலிருந்து 28ம் தேதியன்று 20 பேருந்துகளும் மார்ச் 01ம் தேதி அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Government Bus
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
Transport Department
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 8,554 பயணிகளும் சனிக்கிழமை 4.224 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,696 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.