ஜெயலலிதா, கருணாநிதியை விமர்சித்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் வாழ்க்கை ஒரு பார்வை!
E. V. K. S. Elangovan Political Life: அரசியலில் ஆரம்ப காலகட்டங்களில் கருணாநிதி, ஜெயலலிதாவை விமர்சனம் செய்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் வாழ்க்கை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
E. V. K. S. Elangovan Died
E. V. K. S. Elangovan Political Life: 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தவர் தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இவர், தந்தை பெரியார் ஈ வெ ராமசானியின் அண்ணனான ஈ வி கிருஷ்ணசாமியின் பேரன். ஈவிகே சம்பத்தின் மகன் ஆவார். தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
E. V. K. S. Elangovan
ஈவிகே சம்பத்தின் மறைவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆரம்ப காலத்தில் அவருக்கு பக்க பலமாக நடிகர் சிவாஜி கணேசன் இருந்தார். 1977 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரையில் சிவாஜி கணேசன் உடன் ஒன்றாக பயணம் செய்தார்.
பெரியார் வீட்டு பேரன்; யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் - அவரின் குடும்ப பின்னணி ஒரு பார்வை
E. V. K. S. Elangovan
1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதில், எம்ஜிஆர் 3ஆவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்த சட்டமன்ற தேர்தலில் சத்யமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் முறையாக போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்.
E. V. K. S. Elangovan
1989 சட்டமன்ற தேர்தலில் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சி சார்பில் ஈரோடு பவானி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வியை தழுவினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், MLA.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
E. V. K. S. Elangovan Hospitalized
இதையடுத்து இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு சிவாஜி கணேசன் தனது கட்சியை விபி சிங்கின் ஜனதா தளம் கட்சியோடு இணைத்துக் கொண்டார். அப்போதும் கூட ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியிலே இருந்து செயல்பட்டார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
E. V. K. S. Elangovan Died
இந்த தோல்விக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி தனி கட்சி தொடங்கியதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் (1996 முதல் 2001 வரை) வரையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். 2001 சட்டமன்ற தேர்தலின் போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் வந்ததைத் தொடர்ந்து தனது தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தார்.
E. V. K. S. Elangovan Passed Away
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியில் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது கூட்டணி கட்சி என்று கூட பார்க்காமல் முதல்வர் மு.கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு தான் அதிமுகவின் ஆதரவாளர் என்பதை காட்டிக் கொண்டிருந்தார்.
E. V. K. S. Elangovan
அதுமட்டுமின்றி திமுக தலைவர் மு.கருணாநிதியை விமர்சனம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டிற்கு சென்று இனிப்பு ஊட்டி விட்டு மகிழ்ந்தார். அன்றைய காலகட்டத்தில் நடந்த ஈழத்தமிழர்கள் பிரச்சனையே அதிமுக மற்றும் காங்கிரஸ் பிரிவுக்கு காரணமாக இருந்தது. அதோடு ஜெயலலிதா மற்றும் இளங்கோவனுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்படவும் காரணமாக இருந்தது.
2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்ற உறுப்பினராக சென்றார்.