- Home
- Tamil Nadu News
- டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! 5 நாள் தான் டைம்- உடனே அறிக்கை கொடுங்க - நிர்வாகம் அதிரடி உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! 5 நாள் தான் டைம்- உடனே அறிக்கை கொடுங்க - நிர்வாகம் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால், காலி பாட்டில்களை வைக்க இடமில்லை என்று ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் மது விற்பனை
மதுபானம் விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கூட்டம் கூட்டமாக டாஸ்மாக் கடை முன்பாக மதுப்பிரியர்கள் திரண்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு மது குடிப்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.
இந்த கடைகளில் 2,919 மது அருந்தும் பார்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு ரூ.110 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுகிறது. மது பாட்டில்களை குடித்து விட்டு சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, ஏற்காடு உள்பட தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களில் இந்த சம்பவம் அதிகமாக காணப்படுகிறது.
காலி மதுபான பாட்டில் திரும்ப பெறும் திட்டம்
இந்த நிலையில் மதுபான பாட்டில்களை திரும்பபெறும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தினந்தோறும் 70 லட்சம் மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகி வருகிறது.
இதன் படி மதுபாட்டில்களை திரும்ப கொடுத்தால் 10 ரூபாயை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில், பெரும்பாலான கடைகள் 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்டவையாக உள்ளது. . இந்த குறுகிய இடத்தில் புதிதாக வரும் மதுபாட்டில்களை வைக்கவே போதிய இடமில்லாத நிலையில், காலி மதுபாட்டில்களை எங்கே வைப்பது என டாஸ்மாக் ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டாஸ்மாக் ஊழியர்கள்- சுற்றறிக்கை வெளியீடு
இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபான காலி புட்டிகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் குறித்து குழு (Committee) நியமித்து டாஸ்மாக் சுற்றிக்கை வெளியிட்டுள்ளது. இதில் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபான காலி புட்டிகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் ஏற்கெனவே 9 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது.
மேலும் இன்று (01.09.2025) முதல் சில மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினால் பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்படுவதாகவும், பல்வேறு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்திலிருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
காலி மதுபான பாட்டில் திரும்ப பெறும் திட்டம்
காலி பாட்டில்களை திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டத்தினால் ஏற்படும் கடைப்பணியாளர்களின் பணிச்சுமையினை அறிவதற்கும் அவற்றை எவ்வாறு சரி செய்வது என்று ஊழியர்களை அழைத்து கூட்டம் நடத்தி இத்திட்டத்திற்கு தேவைகளை அறிந்து மற்றும் பணியாளர்களின் சுமைகளைச் கள ஆய்வு செய்து குறைப்பது, எவ்வாறு இத்திட்டத்தினைச் செவ்வனே செயல்படுத்திடத் தேவையான நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி டாஸ்மாக் முது நிலை மேலாளர், மண்டல மேலாளர் ஆகியோர் தலைமையில் மாவட்டங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது
5 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு
இத்திட்டத்தினை விதி முறைகளுக்குட்பட்டு தத்தம் மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களில் மதுபான காலி புட்டிகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டத்தினை செயல்படுத்த ஊழியர்களின் கருத்துக்களை இத்திட்டத்தினை கேட்டறிந்து தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்திட வேண்டுகோள் விடபட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்தின் அறிக்கைகளை அடுத்த 5 தினங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.