- Home
- Tamil Nadu News
- கொடைக்கானல் போறீங்களா? ஒரே ஒரு டிக்கெட் போதும்! எல்லா இடத்தையும் ஜாலியா சுத்தி பார்க்கலாம்!
கொடைக்கானல் போறீங்களா? ஒரே ஒரு டிக்கெட் போதும்! எல்லா இடத்தையும் ஜாலியா சுத்தி பார்க்கலாம்!
கொடைக்கானலில் ஒரே ஒரு டிக்கெட் எடுத்து சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்கும் நடைமுறையை வனத்துறை கொண்டு வந்துள்ளது.

Kodaikanal One Ticket for 4 Tourist Spots
தமிழ்நாட்டில் ஊட்டிக்கு அடுத்து மிக முக்கியமான மலைவாசஸ்தலம் "மலைகளின் இளவரசி" என்று அழைக்கப்படும் கொடைக்கானல் ஆகும். மூடுபனி நிறைந்த மலைகள், குளுகுளுவென இருக்கும் கிளைமேட், அமைதியான ஏரிகள் மற்றும் பசுமையான காடுகள் என இந்த மலைகளின் இளவரசி அனைவரையும் சுண்டி இழுக்கும். இதனால் ஆண்டுதோறும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மலைகளின் இளவரசி கொடைக்கானல்
கொடைக்கானலில் பில்லர் ராக்ஸ், கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, குணா குகை, கோக்கர்ஸ் வாக், பைன் மரக்காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் என பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. இந்நிலையில், கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயத்தை வனத்துறை கூறியுள்ளது.
இனி ஒரே ஒரு டிக்கெட் போதும்
அதாவது கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறைகள், குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் ஆகிய நான்கு சுற்றுலாத் தலங்களுக்கும் இனி ஒரே இடத்தில் கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டு பெறும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது தூண் பாறைகள், குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் ஆகிய 4 இடங்களுக்கும் ஒரே இடத்தில் டிக்கெட் பெற்று இனிமேல் ஜாலியாக சுத்தி பார்க்கலாம்.
ஜாலியாக எல்லா இடத்தையும் பார்க்கலாம்
இதுவரை இந்த 4 இடங்களுக்கும் அந்ததந்த பகுதிகளுக்கு சென்று தான் டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு இடத்திலும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஒரே நாளில் அனைத்து இடங்களையும் சுத்தி பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் பாராட்டு
இப்போது தூண் பாறைகள், குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் மோயர் சதுக்கத்துக்கு செல்ல ஒரே இடத்தில் டிக்கெட் எடுத்தால் போதுமானது என்பதால் எந்தவித தடையுமின்றி ஜாலியாக சுத்தி பார்க்க முடியும். வனத்துறையின் இந்த புதிய நடவடிக்கை சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர்கள் வனத்துறையை பாராட்டி வருகின்றனர்.