- Home
- Tamil Nadu News
- காதலன் சொன்ன ஒற்றை வார்த்தை.. கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் அதிரடி திருப்பம்!
காதலன் சொன்ன ஒற்றை வார்த்தை.. கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் அதிரடி திருப்பம்!
Coimbatore: 5 ஆண்டுகளாக பழகி காதலித்து வந்த நிலையில் மாணவி பாதிக்கப்பட்டது. அவருடைய காதலனுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் மாணவியை திருமணம் செய்ய காதலன் சம்மதித்துள்ளார்.

கோவை கல்லூரி மாணவி பலாத்காரம்
மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஒரு கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி இரவு 10:30 மணி அளவில் தனது காதலனுடன் விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் நகரில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
கூட்டு பாலியல் பலாத்காரம்
அப்போது அவ்வழியாக அங்கு வந்த மூன்று பேர் இதை பார்த்தனர். பின்னர் மூன்று பேரும் சென்று கார் கண்ணாடியை அரிவாளால் உடைத்து காதலனை வெட்டினர். பின்னர் மூன்று கொடூரன்கள் மாணவியை அரிவாளை காட்டி மிரட்டி தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த தவசி ஆகிய மூன்று பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஆயுள் தண்டனை விதிப்பு
வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜன், கைதான மூன்று பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஏழு லட்சம் ரூபாய், அரிவாளால் வெட்டப்பட்டு காயம் அடைந்த காதலனுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு 4 மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டது.
மருத்துவர்கள் மூலம் மாணவிக்கு கவுன்சிலிங்
பாதிக்கப்பட்ட மாணவியின் நிலை குறித்து இந்த வழக்கில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அரசு வழக்கறிஞர் ஜிஷா கூறுகையில்: இந்த கொடூர சம்பவத்துக்கு பிறகு கல்லூரி மாணவி மன ரீதியாக மிகவும் விரக்தி அடைந்த நிலையில் இருந்தார். எனவே அவருக்கு பல்வேறு அறிவுரை கூறி கேட்டறிந்ததாகவும், மருத்துவர்கள் மூலமும் மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதாகவும், மாணவி தற்போது நலமுடன் உள்ளார். மாணவியை மன ரீதியாக தேற்ற காதலன் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். வழக்கு விசாரணைக்காக அந்த மாணவி மதுரையில் இருந்து அடிக்கடி வர வேண்டி இருந்ததால், அவருடைய காதலன் பெற்றோரின் சம்மதத்துடன் தனது வீட்டில் அறை ஒதுக்கி கொடுத்து தங்க வைத்தார்.
மாணவியை திருமணம் செய்ய காதலன் சம்மதம்
மாணவிக்கு அவரது காதலனுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு instagram மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மாணவி +2 படித்து வந்து உள்ளார் பின்னர் பட்டப்படிப்பை மதுரையில் முடித்துள்ளார். முதுகலை படிப்பை கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தொடர்ந்துள்ளார். காதலன் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். ஐந்தாண்டுகளாக பழகி காதலித்து வந்த நிலையில் மாணவி பாதிக்கப்பட்டது. அவருடைய காதலனுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் மாணவியை திருமணம் செய்ய காதலன் சம்மதித்துள்ளார். நடந்த கொடூர சம்பவத்தை ஒரு கெட்ட கனவாக மறந்து விட்டு, மாணவியோடு வாழ்க்கையில் இணைய முடிவு செய்து உள்ளதாக காதலன் கூறினார் என்று அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜிஷா கூறினார்.

