- Home
- Tamil Nadu News
- சுவர் ஏறிக்குதித்து! கல்லூரி மோட்டார் அறையில்! கதவை தட்டி கதறிய மாணவி! அடுத்தடுத்து வெளியாகும் புதிய தகவல்!
சுவர் ஏறிக்குதித்து! கல்லூரி மோட்டார் அறையில்! கதவை தட்டி கதறிய மாணவி! அடுத்தடுத்து வெளியாகும் புதிய தகவல்!
கோவை விமான நிலையம் அருகே காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை, மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. போலீஸ் தேடுதல் வேட்டைக்கு மத்தியிலேயே விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகரில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு ஆண் நண்பருடன் மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி காரில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மதுபோதையில் வந்த மூன்று இளைஞர்கள் இருவரும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை பார்த்தனர். பின்னர் முதலில் கார் கண்ணாடி உடைத்து மட்டுமல்லாமல் ஆண்பரை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு அரிவாளால் வெட்டி விட்டு அந்த கல்லூரி மாணவியை புதருக்கு தூக்கிச் சென்று மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்ததாக முதலில் கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சகோதரர்களான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), இவர்களது உறவினரான மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோரை கடந்த 3ம் தேதி இரவு சுட்டுப்பிடிக்கப்பட்டனர். இதனிடையே நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்: கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோர் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரில் கல்லூரி மாணவி, தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். மது போதையில் இருந்ததால் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து காதலனை கத்தியால் வெட்டிவிட்டு மாணவியை கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து கத்திமுனையில் மிரட்டியபடி இழுத்துச் சென்றதால் மாணவி பயந்து போய் சத்தம் போடாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து 3 பேரும் மாணவியை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மதில் சுவர் அருகே அழைத்து வந்தனர். அங்கு 5 அடி உயரத்தில் இருந்த சுவரை ஏறி குதித்துள்ளனர். மாணவியையும் சுவரை தாண்டி வரச்செய்து தூக்கி சென்றுள்ளனர். உள்ளே நுழைந்த அவர்கள் கல்லூரி வளாகத்தில் கழிவு நீர் தொட்டி அருகே இருந்த மோட்டார் அறையில் கத்தி முனையில் 3 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த நேரத்தில் வெளியே போலீசார் சைரன் சத்தத்துடன் மாணவியை தேடி சுற்றிக்கொண்டிருந்தனர்.
பின்னர் அதிகாலை நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு 3 பேரும் மீண்டும் கல்லூரி மதில் சுவரை ஏறி குதித்து தப்பிச்சென்றுள்ளனர். அதன் பின்னரே மாணவி தட்டுத்தடுமாறி எழுந்து மதில் சுவரை ஏறி குதித்து அங்குள்ள குடியிருப்புவாசிகளிடம் உதவிகேட்டுள்ளார். அதன்பின்னர் தான் மீட்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.