MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையில் சைக்கிள் ஓட்டி, அறுசுவை உணவு உண்டு மகிழ ராகுல்காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

சென்னையில் சைக்கிள் ஓட்டி, அறுசுவை உணவு உண்டு மகிழ ராகுல்காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

முதல்வர் முக ஸ்டாலினின் சைக்கிள் பயணத்தை பாராட்டிய ராகுல்காந்தி. அவரையும் சென்னையில் சைக்கிள் ஓட்டவும், அருசுவை உணவு உண்டு மகிழவும் அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின். 

3 Min read
Dinesh TG
Published : Sep 04 2024, 09:18 PM IST| Updated : Sep 04 2024, 09:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ்நாட்டிற்கு பெரும் முதலீடுகளை ஈர்க்க அரசுமுறைப் பயணமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு, சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் முதலீட்டாளர்களை சந்தித்து பேர்ச்சுவார்த்தையும் நடத்தினார்.

சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் நோக்கியா, கூகுள் உள்ளிட்ட 8 நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமார் 4600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கான முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.

அதைத்தொடர்ந்து, Google, Apple மற்றும் Microsoft போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் பதவி அலுவலர்களுடன் பேச்சுவைர்தை நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் மற்றும் தேவையான தொழிற்சாலைகளை அமைக்க அழைப்புகள் விடுக்கப்பட்டது. Google நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் தமிழ்நாட்டில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

25

வணிக ஒப்பந்தங்களுக்கிடையே, சான்பிரான்சிஸ்கோ நகரில் செயல்பாட்டில் இருக்கும் ஓட்டுநர் இல்லா ஆட்டோமேட்டிக் காரில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின், அந்த வீடியோவையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். பின்னர், சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ நகருக்கு சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சிறப்பான உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாலை நேரத்தில் ஓய்வெடுக்க விரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், சிகாகோ நகரின் கடற்கரையில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார். இந்த வீடியோயையும் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு, "மாலை நேர அமைதி, புதிய கனவுகளுக்கு வித்திடும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

35

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் வீடியோவை பார்த்த காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி, அந்த வீடியவை குறிப்பிட்டு, "பிரதரே.. சென்னையில் நாம் இருவரும் ஒன்றாக எப்போது சைக்கிள் ஓட்டுவோம்?" என ஜாலியாக கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், வாருங்கள் பிரதரே, தங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் அப்போது நாம் ஒன்றாகச் சென்னையில் சைக்கிள் ஓட்டி மகிழ்வோம் என்றும், நான் இன்னமும் தங்களுக்கு என் தரப்பில் இருந்து இனிப்புகள் வழங்க வேண்டியுள்ளது. எனவே, சைக்கிள் பயணம் முடிந்ததும் எனது வீட்டில் இனிப்புடன் கூடிய அறுசுவை தென்னிந்திய உணவை உண்டு மகிழ்ந்திடுவோம்" என எஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆக, சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் சைக்கிள் ஓட்டும் நாள் வரப்போகிறதாக தெரிகிறது. தமிழக முதலைமச்சர் ஸ்டாலின் - காங்கிரஸ் MP ராகுல் காந்தி இருவரும் அனைத்து சமயங்களில் ஒருவொருக்கொருவர் தங்கள் அபரிமிதமான அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

45

முதல்வர் ஸ்டாலினை அண்ணன் என ராகுல்காந்தி அனைத்து இடங்களிலும் குறிப்பிடுகிறார். அரசியல் தலைவர்களில் நான் அண்ணன் எனச் சொல்லும் ஒரே தலைவர் முக ஸ்டாலின் தான் என்றும் ராகுல் காந்தி அண்மையில் பேசி இருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் INDIA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் INDIA கூட்டணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக, இந்த பிரச்சார கூட்டத்திற்கு வரும் வழியில் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்புகளை வாங்கினார் ராகுல்காந்தி. அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

55

சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை தாண்டிச் சென்று ஸ்வீட் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த பணியார்களிடம் நலம் விசாரித்தார். பின்னர், சுவீட் வாங்கினார். அப்போது, அங்கிருந்த பெண் பணியாளர் ஒருவர் "யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு ராகுல்காந்தி, என்னுடைய சகோதரர் முக. ஸ்டாலினுக்காக என்று பதிலளித்தார்.

கோவை பிரச்சார கூட்டத்திற்கு வந்த ராகுல் காந்தியை முதல்வர் முக.ஸ்டாலின் கைகுலுக்கி, கட்டியணைத்து வரவேற்றதும், அப்போது, தான் வாங்கி வந்த ஸ்வீட் பாக்சை முதல்வர் முக.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கொடுத்தார். அதனை மிகுந்த அன்போடு முதல்வர் முக ஸ்டாலின் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

About the Author

DT
Dinesh TG
மு. க. ஸ்டாலின்
திமுக
இந்திய தேசிய காங்கிரஸ்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved