சென்னை கோட்டையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார்
சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி, சுதந்திர தின உரை நிகழ்த்தினார். விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் காலை 9மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார். இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா கோட்டையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து காலை புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து சென்னை கோட்டை கொத்தளத்தின் முன்பாக அணிவகுப்பு மரியாதை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அங்கு தென்னிந்திய பகுதிகளின் ராணுவத் தலைமையக படைத் தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து கோட்டை கொத்தளத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வார். காலை 9 மணிக்கு அங்கிருக்கும் கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைத்து ‘சல்யூட்’ செய்தார் . அப்போது மூவர்ணத்தில் பலூன்கள் பறக்கவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சுதந்திர தின உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி நிகழ்த்தினார்.
தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியோர், அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கிய நிறுவனங்கள், மருத்துவர் ஆகியோருக்கான விருதுகளையும் முதல்-அமைச்சர் வழங்குவார். அதைத் தொடர்ந்து சமூகப் பணியாளர்கள் விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருதுகளும் வழங்கப்படும்.