- Home
- Tamil Nadu News
- ஜெயிக்க முடியலனா இப்படியா பண்ணுவீங்க! நெருப்புடன் விளையாடாதீங்க! பாஜகவுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்!
ஜெயிக்க முடியலனா இப்படியா பண்ணுவீங்க! நெருப்புடன் விளையாடாதீங்க! பாஜகவுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்!
பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டதற்கு பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tamilnadu CM M.K. Stalin Strongly Condemns BJP
பீகாரில் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், பீகாரில் மொத்தமுள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் இறப்பு, வாக்காளர்கள் இடம் பெயர்வு மற்றும் 2 இடங்களில் வாக்குரிமை வைத்திருந்தவர்கள் என 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
இந்திய வரலாற்றில் இவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டதற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாஜகவுக்கு எதிரான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாகவும், பாஜகவுடன் சேர்ந்து முறைகேடு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளன.
பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில், பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பின்தங்கிய மற்றும் கருத்து வேறுபாடு கொண்ட சமூகங்களின் வாக்காளர்களை அமைதியாக அழிக்கவும், பாஜகவுக்கு ஆதரவாக சமநிலையை சாய்க்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது சீர்திருத்தம் பற்றியது அல்ல. இது விளைவுகளைப் பற்றியது.
வாக்களிப்பதை பாஜக தடுக்கிறது
பீகாரில் நடந்தது அனைத்தையும் கூறுகிறது. ஒரு காலத்தில் தனக்கு வாக்களித்த அதே வாக்காளர்கள் இப்போதும் அதையே செய்வார்கள் என்று டெல்லி ஆட்சிக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் வாக்களிப்பதை முற்றிலுமாகத் தடுக்க பாஜக முயற்சிக்கிறது. எங்களை தோற்கடிக்க முடியாவிட்டால், நீங்கள் எங்களை நீக்க முயற்சிக்கிறீர்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள். நமது ஜனநாயகத்திற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் உறுதியான எதிர்ப்பை எதிர்கொள்ளும்.
தமிழ்நாடு முழு பலத்துடன் குரல் எழுப்பும்
தமிழ்நாடு முழு பலத்துடன் குரல் எழுப்பும். இந்த அநீதியை நம்மிடம் உள்ள அனைத்து ஜனநாயக ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிர்த்துப் போராடுவோம். அரசியலமைப்பில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும்: இது ஒரு மாநிலத்தைப் பற்றியது மட்டுமல்ல, இது நமது குடியரசின் அடித்தளத்தைப் பற்றியது. ஜனநாயகம் மக்களுக்கு சொந்தமானது. அது திருடப்படாது'' என்றார்.