- Home
- Tamil Nadu News
- ஓடும் ரயிலில் கீழே தள்ளி படுகாயமடைந்த கர்ப்பிணி! ரொம்ப வேதனையா போச்சு! முதல்வர் முக்கிய அறிவிப்பு!
ஓடும் ரயிலில் கீழே தள்ளி படுகாயமடைந்த கர்ப்பிணி! ரொம்ப வேதனையா போச்சு! முதல்வர் முக்கிய அறிவிப்பு!
கோயம்புத்தூர் - திருப்பதி விரைவு ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு ரயிலில் இருந்து தள்ளப்பட்டார். இதனால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண்! ரொம்ப வேதனையா போச்சு! முதல்வர் முக்கிய அறிவிப்பு
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர், மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ரேவதி (36) க/பெ.ஜெமினி ஜோசப் என்ற நான்கு மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த பிப்ரவரி 06ம் தேதியன்று பிற்பகல் கோயம்புத்தூர் – திருப்பதி விரைவு இயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்துள்ளார்.
Sexual assault in train
அப்போது ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத் தாக்கி, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் இரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு நேற்று கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
pregnant woman
மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ரேவதி அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரேவதி அவர்களின் முழு மருத்துவச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
Pregnant woman molested
இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரேவதி அவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.