MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Sea Step | சென்னைக்கு தண்ணியில கண்டம்! 2040ல் சென்னை இருக்காதா?

Sea Step | சென்னைக்கு தண்ணியில கண்டம்! 2040ல் சென்னை இருக்காதா?

2040ல் சென்னையின் முக்கிய பகுதிகள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது. எந்தெந்த பகுதிகள் தெரியுமா? இதை தடுக்க வழியே இல்லையா? இருக்கு... வாங்க தெரிந்துகொள்ளலாம். நம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளலாம். 

2 Min read
Dinesh TG
Published : Aug 17 2024, 11:38 AM IST| Updated : Aug 17 2024, 11:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Chennai

Chennai

தமிழ்நாட்டில் சென்னைக்கு, தூத்துக்குடிக்கு ஒரு ஆபத்து வரப்போகுது. அதுவும் நாம வாழ்ற இந்த காலத்திலேயே வரப்போது. ஆமாங்க. 2040 சென்னையின் பல பகுதிகள் கடல்நீரில் மூழ்கும் என Center for the study of science, technology, and policy என்ற அமைப்பு எச்சரிச்சிருக்கு. இது பயமுறுத்த அல்ல எப்படி தண்ணி வரும், இதெல்லாம் எப்படி சாத்தியம் எல்லாம் தெரிந்துகொண்டு நம்மால் ஆன முற்சியைகளை மேற்கொள்ளத்தான் இந்த தொகுப்பு!

27
Chennai

Chennai

Center for the study of science, technology, and policy என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024ம் ஆண்டில் அவதாவது அடுத்த 16 ஆண்டுகளில் சென்னையின் சுமார் 7.29% அதவாவது 86 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் கடல்நீர் புகுந்துவிடும். இந்த பிரச்சனை சென்னைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், மற்ற நகரங்களான மும்பை, கொல்கத்தாவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

37
Chennai: Vendors salvage their shop after some damages due to the landfall

Chennai: Vendors salvage their shop after some damages due to the landfall

2040ம் ஆண்டிற்குள் 7.29%, 2060ம் ஆண்டிற்குள் 9.65%, 2080ல் 15.11%, 2100ல் 16.9% சென்னை நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கிவிடும். கடந்த 35 ஆண்டுகளில் 1987 முதல் 2021வரையில் கடல் மட்டத்தின் அளவு 0.679செமீ உயர்ந்துள்ளது. புவிவெப்பமயமாதல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கடல் மட்டத்தின் அளவு வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே கடல் நீர் தன் எல்லையை கடந்து ஊருக்குள் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடும்.
 

47
marina beach

marina beach

சென்னையின் அபாய பகுதிகள்

மணலி, சென்னை துறைமுகம், அடையார், பள்ளிகரணை, தீவுத்திடல் ஆகிய பகுதிகள் அபாய நிலையில் உள்ளன. பொதுவாக சென்னையின் கடல்மட்ட உயரம் மிக குறைவான அளவு உள்ளதே இதன் காரணம். சென்னை கடல் அருகே இருந்தாலும் மழைநீர் வழிந்தோடி கடலில் கலப்பது இல்லை.

Heavy Rain Alert: இந்த 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்! எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
 

57
Chennai Light house

Chennai Light house

கடல் மட்டம் உயர்வது ஏன்?

புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டம் உயர்கிறது. உலக நாடுகள எதிர்கொள்ளும் ஒரு மிகப்பெரிய சாவாலாக குளோபர் வார்மிங் உள்ளது. இயற்கைக்கு மாறனும் இயற்கைக்கு மாறம் என்று கூறிக்கொண்டே இயற்கையை நாம் அழித்துக்கொண்டிருகிறோம் என்பதே உண்மை. ஆற்றல் தேவைக்காக பூமியை தோண்டி வளங்களை எடுத்துகொண்டிருக்கிறோம். வாகனங்களில் இருந்து வெளியேரும் புகை என அனைத்தும் பூமியை வெப்பமாக்கின்றன.

இதனால், துருப்பகுதிகளில் உள்ள பனிமலைகள் உடைந்து உருகி கடலில் கலக்கின்றது. கடலில் அதிகப்படியான உப்பில்லாத நீர் சேர்வதால் அதன் தன்மை மாறி பெரிய பெரிய அலைகாக உருவெடுத்து ஊருக்குள் புக வாய்ப்புள்ளது.

67
Chennai: Youngsters play at the flooded Marina Beach

Chennai: Youngsters play at the flooded Marina Beach

இதை தடுக்க வாய்ப்பே இல்லையா?

இருக்கு, முயன்றால் சாத்தியமில்லாது எதுவும் இல்லை. கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொண்டால் சென்னைக்கு வரவிருக்கும் ஆபத்தை தடுக்கலாம்.

நிலம்-கடல் தடுப்புச்சுவர் (கோஸ்டல் டிஃபென்ஸ் வால் Coastal Defense Wall) நெதர்லாந்து போன்ற நாடுகளில் இது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவர் கடல்நீரை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும்.

இதையும் படிங்க: சென்னையில் ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ. மீது கொடூர தாக்குதல்! நடந்தது என்ன?

77
pichavaram

pichavaram

மாங்குரோவ் காடுகள் (Mangrove forests) கடலை தடுத்தாளும் ஒரே காடுகள் தான் இந்த மாங்குரோவ் காடுகள். கடல்நீரும், ஃபிரெஸ் தண்ணீரும் சேரும் இடங்களில் இதுபோன்ற மாங்குரோவ் காடுகளை வளர்க்கலாம். இவை கடலில் உப்புத்தன்மையை நிலைக்க வைக்கும்.

கட்டுப்படுத்தப்பட்ட நகரமயமாதல் (Urban Planning), ஏற்கனவே சென்னையில் பல்வேறு பகுதிகள் பிளாட் போட்டு விற்கப்பட்டுவிட்டது. இனிமேலாவது கடல் தன்மை அறிந்தும், மழை, வெள்ளம் அறிந்து நகரமயமாக்கப்பட வேண்டும்.

புவிவெப்பமயமாதலை தடுத்தல் (Global warming Reduction) அணுஉலைகள், மீத்தேன் கிணறுகள், போன்றவற்றை குறைத்தல் அல்லது மூடுதல் இதுஒன்றே அதற்கு தீர்வு. இவைகளை நம்பிதான் நம் ஆற்றல் மூலங்கள் உள்ளன என்பதே மறுக்கமுடியாத உண்மை!.

About the Author

DT
Dinesh TG
சென்னை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved