Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ. மீது கொடூர தாக்குதல்! நடந்தது என்ன?

சென்னையில், ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் காவலர் கலைச்செல்வி மீது மதுபோதையில் இருந்த பெண் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை துன்புறுத்தியதாக புகாரின் பேரில் சென்ற காவலரை பெண் தாக்கியுள்ளார்.

Brutal attack Female SI in Chennai tvk
Author
First Published Aug 16, 2024, 1:31 PM IST | Last Updated Aug 16, 2024, 1:40 PM IST

சென்னை டி.பி சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் மதுபோதையில் தனது 6 வயது குழந்தையை அடித்து துன்புறுத்துவதாகவும், அரை நிர்வணமாக நின்றுக்கொண்டு சாலையில் செல்லக்கூடிய பொதுமக்களில் தகராறில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் தடுக்க சென்ற பொதுமக்களை தாக்குவதாகவும்  காவல் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு தகவல் கிடைத்தது.

இதையும் படிங்க: School Students: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குட்நியூஸ்! சென்னை மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு!

அதன் அடிப்படையில் டி.பி சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். பின்னர் அரை நிர்வாணமாக இருந்த பெண்ணை அருகில் இருந்த பெண்களிடமிருந்து உடையை வாங்கி அவருக்கு கொடுத்ததோடு, குழந்தையைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த அந்த பெண் போலீஸ் சீருடையில் இருந்த கலைச்செல்வி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். 

இதையும் படிங்க:  Magalir Urimai Thogai: வங்கிகளுக்கு இன்று விடுமுறை! மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? வெளியான தகவல்!

இதிர் கலைச்செல்விக்கு  முகத்தில் நகக் கீறல்கள் மற்றும் வீக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கலைச்செல்வி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து டி.பி சத்திரம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான பெண் உதவி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி கடந்த சில நாட்களுக்கு முன் ரோகித் என்ற ரவுடியை சுட்டுப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios