Magalir Urimai Thogai: வங்கிகளுக்கு இன்று விடுமுறை! மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? வெளியான தகவல்!
தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று சுதந்திர தினத்தையொட்டி வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் இல்லத்தரசிகளுக்கு இன்று பணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
CM Stalin
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Magalir Urimai Thogai
அதில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 11 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு அவர்களுக்கும் நவம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: School Student: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. விரைவில் வெளியாகப்போகும் சூப்பர் அறிவிப்பு!
Kalaignar Urimai Thogai Thittam
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி சென்ற இடங்களில் எல்லாம் மகளிர் உரிமை தொகை தங்களுக்கு கிடைக்கவில்லையென என கூறினர். அப்போது சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்கும் என உறுதியளித்திருந்தார். அதன்படி மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கடந்த மாதம் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழகத்தில் மின் கட்டணத்தை தொடர்ந்து பேருந்து கட்டணம் உயருகிறதா? உண்மையை போட்டுடைத்த போக்குவரத்துத்துறை!
Magalir Urimai Thogai Scheme
இந்நிலையில் இன்று சுதந்திர தினம் என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. ஆகையால் இன்று மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா அல்லது நாளை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள் இருந்து வருகின்றனர். இன்று வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும் அவரவர் வங்கி கணக்கில் இன்றே வரவு வைக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.