நாளை பள்ளி மாணவர்களுக்கு Working day-வா? இல்லையா? வெளியான அறிவிப்பு!
மோன்தா புயல் காரணமாக கடந்த 28ம் தேதி சென்னையில் பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெரும்பாலான ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவானது. இப்புயலுக்கு மோன்தா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வெளுத்து வாங்கிய கனமழை
இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த புயல் சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்தது. இதன் காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
28ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
இதன் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த 28ம் தேதி விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் மோந்தா புயல் காரணமாக சென்னையில் கடந்த 28ம் தேதி பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.