இனி இந்த 5 ரூல்ஸை மீறினால் அவ்வளவு தான்.! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த போலீஸ்
வாகன விபத்துகளை கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து போலீசாருக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து நெரிசல்- புதிய விதிமுறைகள்
நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாகன விபத்துக்களும் தொடர்ந்து ஏற்படுகிறது. அதிவேக பயணம், குடித்துவிட்டு வாகனம் ஒட்டுவது என பல புகார்கள் கூறப்படுகிறது. இதில் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார்களை ஓட்டி விபத்துகளும் நடைபெறுகிறது.
இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் 25க்கும் மேற்பட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.
விரட்டி விரட்டி பிடிக்கும் போலீஸ்
அந்த வகையில் ஒவ்வொரு தெருவிலும், முக்கிய இடங்களிலும் வாகன ஓட்டிகளை விரட்டி, விரட்டி பிடித்து வருகிறார்கள். ஆயிரம் ரூபாய் முதல் 10ஆயிரம் ரூபாய் வரை விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் அச்சமடையும் வாகன ஓட்டிகள் வாகனத்தை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் புதிய உத்தரவை சென்னை போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5 விதிமீறல்களுக்கு அபராதம்
இந்த நிலையில் ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதன் படி,
5 விதிமீறல்கள் என்ன.?
1. அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும்,
2. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்' அணியாமல் வந்தாலும் அபராதம்
3. நோ-என்ட்ரியில் வாகனம் ஓட்டுவதும்,
4. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலும் அபராதம்
5. இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தாலும் அபராதம் விதிக்க உத்தரவு