MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Rain : தென் மேற்கு பருவமழை எப்போது தொடங்குது!! தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் இடி மின்னலோடு மழை-வானிலை மையம்

Rain : தென் மேற்கு பருவமழை எப்போது தொடங்குது!! தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் இடி மின்னலோடு மழை-வானிலை மையம்

தமிழகத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தென் தமிழக பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இடி, மின்னலோடு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : May 29 2024, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
tamilnadu rain

tamilnadu rain

வானிலை நிலவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

தென்தமிழக  பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் துவங்கக்கூடும் என அறிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Kerala Rain

Kerala Rain

மழைக்கான வாய்ப்பு

இன்று 29.05.2024 மற்றும் நாளை  30.05.2024: தமிழகத்தில்  ஓரிரு    இடங்களிலும், புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
31.05.2024: தமிழகத்தில்   ஒருசில   இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  


01.06.2024 மற்றும் 02.06.2024 தமிழகத்தில்   ஒருசில   இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
 

36
heat wave

heat wave

 ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு: 

இன்று 29.05.2024 மற்றும் நாளை 30.05.2024: அதிகபட்ச வெப்பநிலை, தமிழகத்தில் ஒருசில பகுதிகளில், புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில்  இயல்பை விட 2-3°  செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

31.05.2024 முதல்  02.06.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் (1-2°  செல்சியஸ்) சற்று குறைந்து, இயல்பை ஒட்டியும்/இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.
 

46
heat wave

heat wave

சென்னை, புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 
 

56

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்: 
29.05.2024 மற்றும் 30.05.2024:  குமரிக்கடல் பகுதிகள்,  மன்னார்  வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய  தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

31.05.2024:குமரிக்கடல் பகுதிகள்,  மன்னார்  வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய  தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

66

வங்கக்கடல் பகுதிகள்:

29.05.2024: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சென்னை வானிலை ஆய்வு மையம்
கோடைக்காலம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
Recommended image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image3
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved