ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் திடீர் திருப்பம்! சென்னை ஐகோர்ட் அதிரடி!
J Deepa Case: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.36 கோடி வருமான வரி பாக்கிக்காக அவரது வாரிசான ஜெ.தீபாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜெ.தீபா
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2007ம் ஆண்டு வருமான வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள ரூ.36 கோடியை உடனடியாக செலுத்தும்படி கூறி அவரது சட்டப்பூர்வ வாரிசான ஜெ.தீபாவுக்கு வருமான வரித் துறை சார்பில் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து ஜெ.தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
சென்னை உயர்நீதிமன்றம்
அப்போது ஜெயலலிதாவின் வருமான வரித்தொகை ரூ. 36 கோடியில் இருந்து ரூ.13 கோடியாக குறைக்கப்பட்டு புதிய நோட்டீஸ் ஜெ.தீபாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வருமான வரித்துறை
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. ஆகையால் தீபாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.