- Home
- Tamil Nadu News
- கோவை உள்ளிட்ட இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுதாம் மழை! வானிலை மையம் வார்னிங்!
கோவை உள்ளிட்ட இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுதாம் மழை! வானிலை மையம் வார்னிங்!
வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் காற்று சந்திப்பதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Tamilnadu heatwave
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. மறுபுறம் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு புழுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
tamilnadu rain
இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். அதாவது வளிமண்டல் கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
heat waves increase
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்! இது சும்மா டிரெய்லர் தான்! இனிமே தான் வெயின் ஆட்டமே இருக்காம்! வானிலை மையம் எச்சரிக்கை!
Heavy Rain Alert
7 மாவட்டங்களில் மழை
இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.