- Home
- Tamil Nadu News
- மக்களே குடையில்லாமல் வெளியே போவாதீங்க! 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகுதாம்!
மக்களே குடையில்லாமல் வெளியே போவாதீங்க! 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகுதாம்!
தமிழகத்தில் வெயில் 100 டிகிரி தாண்டி கொளுத்தும் நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Tamilnadu Heatwave
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tamilnadu Rain
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
chennai weather update
சென்னை வானிலை அப்டேட்
அதேபோல் இன்று வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! இடி மின்னலுடன் மழை இருக்காம்! வானிலை மையம் அலர்ட்!
Heatwave
வெப்பநிலை அதிகரிக்கும்
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்திருந்தது.
Tamilnadu Heavy rain Alert
மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.