- Home
- Tamil Nadu News
- காலையிலேயே அலறிய பெண்கள்.! சென்னையில் ஒரு மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு
காலையிலேயே அலறிய பெண்கள்.! சென்னையில் ஒரு மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு
சென்னையில் இன்று காலை ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர், அடையாறு, கிண்டி உட்பட பல பகுதிகளில் பெண்கள் நகைகளை இழந்துள்ளனர். ஒரே கும்பல் இந்த சம்பவங்களில் ஈடுபட்டதா என போலீசார் விசாரணை.

Chain Snatching
Chains snatched In Chennai : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் கூறப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக நகைப்பறிப்பு சம்பவம் தலைநகர் சென்னையை அலறவிட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக பெண்கள் சாலையில் நடமாட அச்சம் அடைந்துள்ளனர்.
அடுத்தடுத்த செயின் பறிப்பு
இன்று காலை திருவான்மியூர் இந்திர நகர் பகுதியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பைக்கில் வந்த இரண்டு பேர் 5 சவரன் நகை பறித்துள்ளனர். இதனால் அந்த பெண் போலீசாரிடம் புகார் கொடுக்க சென்ற நிலையில் அடுத்ததாக அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த அம்புஜம் என்ற பெண்ணிடம் இருந்து அரை சவரன் நகை திருடப்பட்டுள்ளது. கிண்டி பகுதியில் காலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த நிர்மலா என்ற பெண்ணிடம் இருந்து 5 சவரன் பறிக்கப்பட்டது தெரியவந்தது.
சென்னையை மிரட்டிய ஒற்றை கும்பல்
இதே போல சைதாப்பேட்டை பகுதியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த இந்திரா என்ற பெண்ணிடம் ஒரு சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதியிலும் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே கும்பலா.? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கும்பலா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் முதல் கட்ட தகவலில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பல் என கண்டறியப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ்
அந்த வகையில் பள்ளிக்கரணை பகுதியில் இன்று காலை செயில் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட தொடங்கிய கும்பல் வேளச்சேரி, அடையாறு, சைதாப்பேட்டை வழியாக கிண்டி வரை அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் மூலம் செயின் பறிப்பு நபர்களை போலீசார் நெருங்கிவிட்டாதகவும் தகவல் கூறப்படுகிறது.