MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கரூர் வழக்கு: விஜய்க்கு சிபிஐ மீண்டும் வைத்த குண்டு! – பின்னணியில் நடப்பது என்ன..? பரபரக்கும் தமிழக அரசியல்

கரூர் வழக்கு: விஜய்க்கு சிபிஐ மீண்டும் வைத்த குண்டு! – பின்னணியில் நடப்பது என்ன..? பரபரக்கும் தமிழக அரசியல்

TVK Vijay: கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

2 Min read
Author : Velmurugan s
Published : Mar 09 2026, 01:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விஜய்க்கு சிபிஐ சம்மன்
Image Credit : Asianet News

விஜய்க்கு சிபிஐ சம்மன்

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்களுக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. நாளை (மார்ச் 10, 2026) டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

25
சம்பவத்தின் பின்னணி
Image Credit : X

சம்பவத்தின் பின்னணி

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, கரூரின் வேலுசாமிபுரத்தில் நடிகர் விஜய் பங்கேற்ற அக்கட்சியின் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 10,000 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி கொண்ட அந்த இடத்தில், சுமார் 30,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விவகாரத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், விஜய் வருகையில் ஏற்பட்ட தாமதமே கூட்ட நெரிசலுக்கு முக்கியக் காரணம் என்றும் புகார்கள் எழுந்தன. தமிழக அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் திருப்தியில்லை எனக் கூறி, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.

Related Articles

Related image1
தலைவா பட ‘டைம் டூ லீடு’ டேக் லைன் நான் போடல... அது அவரோட ஐடியா - ஏ.எல்.விஜய் பகிர்ந்த சீக்ரெட்
Related image2
விஜய் வைத்த அக்னிப் பரீட்சை..! திமுக அஸ்திவாரத்துக்கு ஆப்பு..! நிலைகுலையும் அறிவாலயம்..!
35
தொடரும் சிபிஐ விசாரணை
Image Credit : X

தொடரும் சிபிஐ விசாரணை

உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். அவரிடம் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

கூட்டம் திட்டமிடப்பட்ட விதம், பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டது குறித்த விவரங்கள் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் கேள்விகளை எழுப்பியிருந்தனர். மேலும், தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட அதிகாரிகள் என பலரிடமும் சிபிஐ தனித்தனியாக விசாரணை நடத்தியது.

45
மீண்டும் சம்மன் ஏன்?
Image Credit : X

மீண்டும் சம்மன் ஏன்?

சிபிஐ தற்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்யும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதுவரை திரட்டப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், விஜய்யிடம் மேலும் சில தெளிவுபடுத்தல்களைப் பெற சிபிஐ முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, பிரச்சார வாகனத்தின் சிசிடிவி பதிவுகள் மற்றும் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட 3D லேசர் அளவீட்டு முடிவுகளின் அடிப்படையில் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
அரசியல் பரபரப்பு
Image Credit : Asianet News

அரசியல் பரபரப்பு

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள விஜய்க்கு, இந்தச் சட்ட ரீதியான நகர்வுகள் பின்னடைவை ஏற்படுத்துமா அல்லது அவர் இதனை எவ்வாறு எதிர்கொள்வார் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் தவெக வேட்பாளர் நேர்காணல் நாளை முதல் நடைபெற உள்ளதால் விஜய் விசாரணைக்கு ஆஜராவது சந்தேகமென சொல்லப்படுகிறது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
கரூர் சிபிஐ விசாரணை

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் வைத்த அக்னிப் பரீட்சை..! திமுக அஸ்திவாரத்துக்கு ஆப்பு..! நிலைகுலையும் அறிவாலயம்..!
Recommended image2
எங்க அப்பாவுக்கு 87 வயதாகிவிட்டது! அன்புமணி நீதிமன்றத்தில் போட்ட ஒரே போடு! ராமதாஸ்க்கு பறந்த நோட்டீஸ்!
Recommended image3
Now Playing
திமுக ஆட்சி தொடரும் என்று விளம்பரம் செய்கிறார்கள்...இதை மக்கள் சொல்ல வேண்டும்! சீமான் பேட்டி
Related Stories
Recommended image1
தலைவா பட ‘டைம் டூ லீடு’ டேக் லைன் நான் போடல... அது அவரோட ஐடியா - ஏ.எல்.விஜய் பகிர்ந்த சீக்ரெட்
Recommended image2
விஜய் வைத்த அக்னிப் பரீட்சை..! திமுக அஸ்திவாரத்துக்கு ஆப்பு..! நிலைகுலையும் அறிவாலயம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved