MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய அன்புமணி! வன்னியர் சங்க மாநாட்டுக்கு தடையா? உயர்நீதிமன்றம் அதிரடி!

வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய அன்புமணி! வன்னியர் சங்க மாநாட்டுக்கு தடையா? உயர்நீதிமன்றம் அதிரடி!

PMK Chithirai Full Moon conference: பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநாட்டிற்கு 47 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. 

1 Min read
Author : vinoth kumar
Published : May 09 2025, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சித்திரை முழு நிலவு மாநாடு

சித்திரை முழு நிலவு மாநாடு

பாமக சார்பில் வரும் 11ம் தேதி செங்கல்பட்ட மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரி ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

24
உயர்நீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அதில், சித்ரா பவுர்ணமி நாளில் பாமக மாநாடு நடத்துவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். 2013ம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரம், 20% இட ஒதுக்கீடு கேட்டு நடத்தப்பட்ட போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டிருந்தார். ஆகையால் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மாலா மற்றும் அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 
 

Related Articles

Related image1
நீரில் 115 மடங்கு பாதரசம்! ஸ்டெர்லை ஆலை விட மோசமானது என்எல்சி! இழுத்து மூடுங்கள்! சொல்வது யார் தெரியுமா?
Related image2
பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு: இலச்சினை வெளியீடு
34
மாநாட்டுக்கு 47 நிபந்தனைகள் விதித்த தமிழக அரசு

மாநாட்டுக்கு 47 நிபந்தனைகள் விதித்த தமிழக அரசு

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாநாடு நடக்கும் நாளில் கிழக்கு கடற்கரை சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறிய வீடியோவை நீதிபதிகளிடம் காண்பித்தனர். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்: மாநாட்டுக்கு 47 நிபந்தனைகளுடன் மே 5ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 

44
அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும்

அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும்

இதனையடுத்து பாமக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காவல் துறை விதித்துள்ள அத்தனை நிபந்தனைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படும். எந்த அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும் என்று உறுதியளித்தார். குறிப்பாக மாநாட்டின் போது பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும். மாநாடும் சித்ரா பவுர்ணமி விழாவும் அமைதியாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வடக்கு மண்டல ஐஜிக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். 
 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு அரசு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாணவர்களுக்கு மதிய உணவு சீருடை வேண்டுமா? அப்படினா இது ரொம்ப முக்கியம்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
Recommended image2
சசிகலா பொதுக்கூட்டத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த வெள்ளதுரை? போட்டியிடும் தொகுதி இதுதானா?
Recommended image3
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Related Stories
Recommended image1
நீரில் 115 மடங்கு பாதரசம்! ஸ்டெர்லை ஆலை விட மோசமானது என்எல்சி! இழுத்து மூடுங்கள்! சொல்வது யார் தெரியுமா?
Recommended image2
பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு: இலச்சினை வெளியீடு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved