MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • செங்கல்பட்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி! நடந்தது என்ன?

செங்கல்பட்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி! நடந்தது என்ன?

சென்னையில் நடந்த கார் விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியபோது லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 01 2025, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குடும்பத்துடன் காரில் மதுரை திரும்பிய போது விபத்து

குடும்பத்துடன் காரில் மதுரை திரும்பிய போது விபத்து

மதுரை ஜானகி நகர் பதும்பூர் சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கார்த்திக். சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கார்த்திக், அவரது மனைவி நந்தினி, அவர்களது குழந்தைகளான 7 வயது சிறுமி இளமதி, ஒரு வயது குழந்தை சாய்வேலன் மற்றும் நந்தினியின் தந்தை அய்யனார், அவரது மனைவி தெய்வபூஞ்சாரி மற்றும் கார் ஓட்டுநர் சரவணன் ஆகிய 7 பேரும் பங்கேற்று விட்டு  ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
சிக்னலில் நின்ற கார் மீது மோதல்

சிக்னலில் நின்ற கார் மீது மோதல்

அப்போது சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள திருத்தேரி சிக்னலில் இவர்களது கார் நின்றது. அப்போது அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக காரின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் ஒரு வயது குழந்தை, கார் ஓட்டுநர் சரவணன், அய்யனார் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு குட்நியூஸ்! சிலிண்டர் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

34
ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலி

ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலி

மேலும், கார்த்திக், நந்தினி, தெய்வபூஞ்சாரி, இளமதி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கிய காரை மீட்டு படுகாயமடைந்தவர்களை மீட்டு  செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: இந்த வயசுல இதெல்லாம் தேவையா? மாணவிகளிடம் டபுள் மீனிங் பேச்சு! ஓய்வு பெறும் நேரத்தில் ஆசிரியருக்கு ஆப்பு!

44
போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

மேலும் உயிரிழந்த 3 பேரில் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கான அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் விபத்தில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
காவல்
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: மே 26ம் தேதி! தமிழகம் முழுவதும் நாளை 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை.!
Recommended image2
Crime News: அடங்காத மணிகண்டன்! அம்மாவுக்கு பிராக்கெட் போட்ட கையோடு 14 வயது பொண்ணுக்கு ஸ்கெட்ச்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
Recommended image3
Tamilnadu Rain: மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம்.. இன்றும், நாளையும் ஓயாமல் மழை ஊத்தப்போகுதாம்.. எந்தெந்த மாவட்டங்களில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved