மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது தமிழகம்.! வெளியாகிறது அறிவிப்பு- ஈரோடு தொகுதியை கைப்பற்றப்போவது யார்.?
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுமா அல்லது திமுக போட்டியிடுமா? அதிமுகவின் நிலைப்பாடு என்ன?
dmk alliance and admk
திமுக கூட்டணியின் தொடர் வெற்றி
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 4 வருடங்களை எட்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த 4 வருடங்களில் திமுக ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தலானது நடைபெறவுள்ளது. அந்த வகையில் திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த கட்சியின் கூட்டணியானது நாடாளுமன்ற தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட தேர்தல்களில் வெற்றியை பறித்துள்ளது.
evks elangovan
ஈரோடு கிழக்கு தொகுதி - இடைத்தேர்தல்
அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியானது கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவும் செய்தார்.
இந்த சூழ்நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இளம் வயதில் திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Erode
ஈவிகேஎஸ் மரணம்
இதனையடுத்து 2023ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்றார்.
ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே ஈவிகேஎஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த மாதம் காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக இடைத்தேர்தலை ஈரோடு கிழக்கு தொகுதி சந்திக்கவுள்ளது.
MLA EVKS Elangovan Passed Away
டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி
எனவே ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாத காலத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மதியம் டெல்லி சட்ட மன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது. அதோடு சேர்த்து நாட்டில் பல்வேறு பகுதியில் காலியாக உள்ள இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஈரோட்டில் போட்டியிட போவது யார்.?
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டவுள்ள நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்படுமா.? அல்லது தனது செல்வாக்கை நிரூபிக்க திமுகவே களம் இறங்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் கடந்தமுறை தேர்தலை புறக்கணித்த அதிமுக இந்த முறை எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.