MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த முக்கிய இ-மெயில்.! அலறும் கிரிக்கெட் வீரர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த முக்கிய இ-மெயில்.! அலறும் கிரிக்கெட் வீரர்கள்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரிப்பால் ஐபிஎல் போட்டி ரத்து. சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
| Updated : May 09 2025, 05:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்தியா  பாகிஸ்தான் போர் பதற்றம்

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட மோதல் அதிகரித்துள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் அலுவலகம், பயிற்சி மையம், ஆயுத சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை குறிவைத்து தாக்கியது. இதில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியா மீது ஏவுகனை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தினர். இதனை நடுவானில் இந்தியாவின் வான் பாதுகாப்பு கவசம் தாக்கி அழித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஐபிஎல் போட்டி ஒரு வாரத்திற்கு ரத்து

ஐபிஎல் போட்டி ஒரு வாரத்திற்கு ரத்து

இந்த பரபரபான சூழ்நிலை காரணமாக நேற்று தர்மசாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டது. பாதியில் போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  பாகிஸ்தான் மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

33
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

அதில், சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்களும் வெளியாகி உள்ளது. சென்னையில் முக்கியமான மைதானமாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது சென்னை அணி வீரர்கள் மைதானத்தில் பயிற்சி எடுத்து வரும் நிலையில் இந்த இமெயில் பதற்றத்தை உருவாகியுள்ளது.  இதனையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
எம். எஸ். தோனி சி.எஸ்.கே
ஐபிஎல் 2025
இந்தியா-பாகிஸ்தான் போர்
பயங்கரவாதத் தாக்குதல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
Recommended image2
Now Playing
தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
Recommended image3
Now Playing
வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
Related Stories
Recommended image1
ராணுவத்துக்கு ஐபிஎல் அணிகள் பாராட்டு! சிஎஸ்கே சொன்னது தான் இதில் ஹைலைட்!
Recommended image2
IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் ரத்து! அதிரடி அறிவிப்பு! மற்ற போட்டிகள் எப்போது நடக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved