திமுகவை அப்படியே காப்பியடிக்கும் விஜய்.. எந்த ரூட்டில் தெரியுமா? குமுறும் வினோஜ் செல்வம்!
Thalapathy Vijay : பிரபல நடிகர் தளபதி விஜய், தனது அரசியல் வருகை குறித்து அறிவித்த நாளிலிருந்து அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பிரபலமான நடிகராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலம்வந்து கொண்டிருப்பவர் தான் விஜய். இளைய தளபதியாக கொண்டாடப்பட்டு, இன்று அவரது ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் விஜய், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் டாப் 3 இடத்தில் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. வேற்று மொழிகளில் கேமியோ பாத்திரங்களை தவிர, முழுமையாக எந்த திரைப்படத்திலும் அவர் நடித்ததில்லை.
கோலிவுட்டை பொறுத்தவரை அவருக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாக ஒரு நடிகரோ அல்லது நடிகையோ, திரைத்துறையில் புகழை பெரிய அளவில் இழந்த பிறகு தான் அரசியலை நாடுவார்கள் என்ற ஒரு கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தளபதி விஜய்யோ, புகலின் உச்சியில் இருக்கும் இந்த நேரத்தில் அரசியலில் நுழைவது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
தளபதி விஜயின் சரி என்ற ஒரு வார்த்தைக்கு இணங்கி, பல இளம் இயக்குனர்கள் கதைகளோடு தயாராக இருக்கும் இந்த நேரத்தில், அவர் அரசியலில் நுழைவது மட்டுமல்லாமல், இனி மக்களுக்கு தொண்டாற்றவுள்ளதால் தன்னுடைய திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதும் மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆர்த்திக்கு நடந்த சிசேரியன்; மயக்கம் போட்ட ஜெயம் ரவி! பிளாஷ் பேக் தகவல்!
Tamilaga Vettrikazhagam
தளபதியின் ரசிகர்கள் இனி அவரை திரையில் காண முடியாது என்கின்ற சோகத்தில் இருந்தாலும் வருகின்ற 2026ம் ஆண்டு தேர்தலில் தங்களுடைய அபிமான நட்சத்திரம் முதல்வர் வேட்பாளராக தன்னுடைய கட்சியின் சார்பாக களமிறங்க உள்ளது அவர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை கொடுத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தன்னுடைய அரசியல் வருகை குறித்து சூசகமாக அவ்வப்போது பேசி வந்த தளபதி விஜய் தன்னுடைய படங்களிலும் பெரிய அளவில் அரசியல் பேச தொடங்கினார்.
குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான தலைவா, மெர்சல் மற்றும் சர்க்கார் போன்ற திரைப்படங்கள் அவருடைய அரசியல் வருகையை உறுதி செய்தது. இந்த சூழலில் தான் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது "தமிழக வெற்றிக்கழகம் கட்சி"யின் அறிவிப்பை வெளியிட்டார். அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டு அசத்தினார். பாடலாசிரியர் விவேக் வரிகளில், தமன் இசையில் அந்த பாடல் பெரும் வரவேற்பு பெற்றது.
அதே போல அவர் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் கூட அவருடைய கட்சி கொடியும் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்தும் மிகப்பெரிய அளவில் விவாதம் நடந்தது அனைவரும் அறிந்ததே.
CM Stalin
அரசியல் தலைவராக தற்பொழுது தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக மாறி உள்ள தளபதி விஜய், அவ்வப்போது பல அரசியல் தலைவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக "விடுதலை சிறுத்தைகள் கட்சி" தலைவர் தொல் திருமாவளவன், மற்றும் "நாம் தமிழர் கட்சி" சீமான் உள்ளிட்டவர்களுக்கு அவர்களுடைய பல சமயங்களில் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் அவர்களும் விஜய்க்கு பதில் வாழ்துள்ளலை கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், த.வெ.க தலைவர் விஜய் மீது புதிதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. பாஜக மாநில செயலாளர் வினோத் செல்வம் நேற்று முன்தினம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "இப்போது புதிய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கும் பிரபல நடிகர் விஜய், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து சொல்லுவார் என்று இரவு 7:00 மணி வரை காத்திருந்தேன். ஆனால் அவர் இறுதி வரை யாருக்கும் எந்த விதமான வாழ்த்தும் சொல்லவில்லை".
"இதன் மூலம் சிறுபான்மையினரை குஷிப்படுத்தும் திமுகவின் அதே பழைய தந்திரத்தை அவர்களிடமிருந்து காப்பி அடித்து, தற்பொழுது அதை செயல்படுத்தி வருகிறார் நடிகர் விஜய். இதனால் அவர் எந்த அளவுக்கு தாழ்ந்து போயிருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மக்களே இனிமேலாவது நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டும்" என்று பேசி இருக்கிறார்.
thalapathy vijay
தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான "கோட்" திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில், வருகின்ற செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் விக்கிரவாண்டியில் நடக்க உள்ள தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டில் கலந்து கொள்கிறார் விஜய். சுமார் 80,000 பேர் வரை இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மாநாட்டு பணிகளை முடித்த உடனேயே தனது 69வது திரைப்பட பணிகளை தளபதி விஜய் தொடர்ந்து உள்ளார்.
தற்போது வரை அந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் எச். வினோத் தான் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அண்மையில் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து வினோத் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனமே அந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகி, பின் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது. கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்காக எழுதிய ஒரு கதை அதுவென்றும், இப்போது அந்த கதையை தளபதி விஜய்க்கு அவர் பயன்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றுதான் இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசியலுக்காக விஜயகாந்த் சென்டிமென்ட்டை விடாமல் துரத்தும் விஜய்! ஆச்சர்ய தகவல்!