- Home
- Tamil Nadu News
- எடப்பாடியை தேடிச்சென்று சந்தித்த ஒட்டுமொத்த பாஜக.! அண்ணாமலை மட்டும் மிஸ்ஸிங்- காரணம் என்ன.?
எடப்பாடியை தேடிச்சென்று சந்தித்த ஒட்டுமொத்த பாஜக.! அண்ணாமலை மட்டும் மிஸ்ஸிங்- காரணம் என்ன.?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஆனால், இந்த சந்திப்பில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.

தமிழக அரசியல்- வேகமெடுக்கும் கூட்டணி
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பாக திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முழுவதும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், செயல் வீரர்கள் கூட்டமும் நடத்தப்படுகிறது. தேர்தல் நேரத்தில் செய்ய வேண்டிய திட்டப்பணிகள், வாக்குகளை கவர்வது போன்ற பல்வேறு ஆலோசனைகள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொண்டர்களுக்கு வழங்கி வருகிறார்கள். இது ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டு வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
பாஜகவோடு கூட்டணியை உறுதிய செய்த அதிமுக
அந்த வகையில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவின் கூட்டணியானது வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதே நேரத்தில் திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க அதிமுகவானது திட்டமிட்டு வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக,
எடப்பாடியை சந்தித்த பாஜக நிர்வாகிகள்
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்துள்ளது. இந்தக் கூட்டணியில் பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் களத்தில் இறங்கவுள்ளது. இந்த கட்சியோடு எந்த, எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது தொடர்பாக தேர்தல் நெருக்கத்தில் தெரியவரும். இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் தற்போது கூட்டணி அமைத்திருந்தாலும், பாஜக- அதிமுக தலைவர்களின் சந்திப்பு நடைபெறாமல் தான் இருந்து வந்தது.
அதிமுக- பாஜக தேர்தல் கள நிலவரம் ஆலோசனை
இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜக கூட்டணி அமைத்த எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழிசை சவுந்திர ராஜன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசியுள்ளனர். அப்போது தேர்தல் பணி, தேர்தல் வியூகம் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடியை புறக்கணித்த அண்ணாமலை
இந்த சந்திப்பின் போது பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மட்டும் கலந்து கொள்ளவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருந்தாலும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. எனவே எடப்பாடியோடு நடைபெற்ற சந்திப்பை அண்ணாமலை புறக்கணித்துள்ளதாகவே கூறப்படுகிறது.