மாநிலங்களவை எம்.பி. பதவி! ஆந்திராவில் அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுத்த பாஜக! ஏன்?
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்ட நிலையில், அங்கு இருந்து வேறு பாஜக உறுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

Annamalai cannot be selected as Rajya Sabha MP from AP: தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. சுமார் 3 ஆண்டுகளாக பாஜகவின் மாநில தலைவராக பதவி வகித்த இவர் தமிழ்நாட்டில் பாஜக மூலை மூடுக்கிலும் வளர்வதற்கு பெரும் பங்கு வகித்தார். அண்மையில் அண்ணாமலையில் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினர் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
Annamalai, BJP
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை
2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளன. ஏற்கெனவே அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்த நிலையில், அதிமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார் என ஒருபக்கம் தகவல்கள் பரவின.
பாரட்டிய அமித்ஷா
அதே வேளையில் நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றவுடன் அண்ணாமலையை பாரட்டிய அமித்ஷா, ''தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலை ஜியின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு செல்கிறார். பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும்'' என்று கூறியிருந்தார்.
Amit Shah, Annamalai
அண்ணாமலைக்கு எம்.பி. பதவி
அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே அண்ணாமலைக்கு எம்.பி. பதவி வழங்க இருப்பதாகவும், அவர் ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் விஜய்சாய் ரெட்டி பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு இருந்து அண்ணாமலை தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் உறுதிப்படுத்தின.
ஆந்திராவில் வாய்ப்பு மறுப்பு
அதே வேளையில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜகவிற்கு ஒதுக்கக் கூடாது. தங்களது கட்சியை சேர்ந்தவர் தான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சிக்கும், அண்ணாமலைக்கும் அதிர்ச்சி அளிக்கு விதமாக ஆந்திரா மாநிலங்களவை தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த வெங்கட சத்யநாராயணன் என்பவரை பாஜக தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது.
Annamalai, Andhra Pradesh
வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?
இதனால் அண்ணாமலை ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அந்த இடம் அண்ணாமலைக்குத் தான் என உறுதியாக கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென பாஜக தலைமை வேறு ஒருவரை வேட்பாளராக அறிவித்தது ஏன் என்று தெரியவில்லை. பாஜகவின் செயலால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனாலும் தமிழ்நாடு, அசாம், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இருந்து அண்ணாமலை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: இனி பெண்களுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு! காவல்துறை கொண்டு வந்த சூப்பர் திட்டம்!